Bhagyalakshmi Serial Update 07.09.21

மதர்ஸ் டே விழாவிற்கு அம்மாவை கூட்டி சென்று விட்டு சமையல் செய்த காரணத்திற்காக பாதியிலேயே கிளம்ப சொல்கிறார் இனியா.

Bhagyalakshmi Serial Update 07.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. நேற்று கோபியின் முன்று பாட்டு சத்தம் கேட்டது தன்னை மறந்து நடனம் ஆடுகிறார். பாக்யாவில் நடனத்தைப் பார்த்து கோபி சூப்பர் என பாராட்டிவிட்டு உள்ளே செல்கிறார். இதை வீடியோவாக எடுத்து எழில் தன்னுடைய அம்மாவை ஊக்கப்படுத்துகிறார்.

அதன் பின்னர் மறுநாள் காலையில் இனியா பள்ளிக்குச் செல்வதற்காக பாக்யா தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் பாக்கியா டான்ஸ் ஆடியதை பற்றி அனைவரிடமும் கூறுகிறார். அப்போதும் அவருடைய மாமியார் பாக்கியாவை கலாய்க்கிறார்.

டி20 மேட்ச் : மிரட்டியது நியூசிலாந்து அணி, மிரண்டது வங்காள தேச அணி..

பின்னர் ஒரு வழியாக பாக்கியாவும் இனியாவும் பள்ளிக்கு கிளம்பிச் செல்கின்றனர். பள்ளியில் இனியாவின் தோழிகள் பாக்யாவிடம் பேசி விட்டு தங்களது அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். யார் யார் என்னென்ன செய்யப் போகிறார்கள் என கேட்டுக் கொள்கின்றனர். பின்னர் பாக்கியாவிடம் கேட்க அது சர்ப்ரைஸ் என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார் .

நீ என்ன மாதிரியான ஆளுனு தெரியும்.., Anchor-ஐ கலாய்த்த யோகி பாபு..! | Dikkiloona Team Interview | HD

அதன் பின்னர் முதல் போட்டியில் பாக்கியா சமையலை தேர்ந்தெடுத்து அதில் பங்கேற்கிறார்‌. மற்றவர்கள் எல்லாரும் அறிவுப்பூர்வமாக செய்வதைப் பார்த்த இனியா பாக்கியா சமையலை தேர்ந்தெடுப்பதால் கடுப்பாகிறார். பின்னர் அனைவரும் அவர்கள் தேர்ந்தெடுத்தது குறித்து விளக்கமளித்து வருகின்றனர். எல்லோரும் சூப்பராக பர்ஃபாமென்ஸ் செய்வதால் இனியா தன் அம்மாவிற்கு பரிசு கிடைக்காது என நினைத்து அவரை பாதியிலேயே கிளம்பி விடுமாறு கூறுகிறார். உடம்பு முடியல அதனால கிளம்பிட்டாங்கனு சொல்லி சமாளிச்சுக்கிறேன். என் மானத்தை வாங்காதே அம்மா என இனியா பாக்யாவை வார்த்தையால் காயப்படுத்துகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலஷ்மி சீரியல் எபிசோட்.