பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் குரல் மாறியது ஏன் என வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் சதீஷ்.

Bhagyalakshmi Serial Gopi Dubbing : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இருநூறு எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவராக நடித்து வருபவர் கோபி.

இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் பலரையும் அந்த கதாபாத்திரமாகவே பார்க்க வைத்துள்ளது. இதனால் இவர் சீரியலில் நடிக்கிறார் என்பதை மறந்து பலரும் இவரை திட்டி தீர்த்து விட்டனர். மக்கள் திட்டும் திட்டுதான் இவருடைய நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் குரல் மாறியது ஏன் தெரியுமா?? அவரே வீடியோ வெளியிட்டு அளித்த விளக்கம்

கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் கோபியின் குரலில் மாற்றம் உள்ளது. அதற்கான காரணத்தை சதீஷ் வீடியோ மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அதாவது அவருக்கு டப்பிங் கொடுத்து வருபவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் குரல் கொடுத்து வருகிறார். விரைவில் பழைய குரலில் சீரியல் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.