பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களில் மக்களைக் கவர்ந்தது எது என நடத்தப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவுகள் தெரிய வந்துள்ளன.

Beast Vs KGF2 Voting Results : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் படத்திற்கு போட்டியாக வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.

இப்படியான நிலையில் நேற்று கலக்கல் சினிமாவின் சமூக வலைதள பக்கங்களில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்ற கேள்வியோடு ஓட்டெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில் யூட்யூபில் பெறப்பட்ட 15 ஆயிரம் ஓட்டுகளின் அடிப்படையில் கே ஜி எஃப் 2 திரைப்படம் 51% ஓட்டுகளை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்திற்கு 31% ஓட்டுகள் கிடைத்துள்ளன.

மேலும் இரண்டு படமும் சூப்பர் 6% பேரும் இரண்டுமே இல்லை என 9% பேரும் ஓட்டளித்துள்ளனர்.

அதேபோல் ட்விட்டரில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் பீஸ்ட் திரைப்படம் கேஜிஎப் 2 படம் 53% ஓட்டுக்களையும் பீஸ்ட் திரைப்படம் 39% ஓட்டுகளை பெற்றுள்ளது. ட்விட்டரில் இரண்டு படமும் சூப்பர் என 5 சதவீதம் பேரும் இரண்டுமே இல்லை என மூன்று சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.