பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் எங்கே நடக்க உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Beast Movie Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதனை ஏற்று மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஹாக்கியில், இந்திய பெண்கள் கலக்கல் வெற்றி..பதக்கம் பறிப்பார்களா.?

3ஆம் கட்ட படப்பிடிப்பில் மீண்டும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE🔴: Snehan & Kannika Ravi’s Full Wedding Reception Video👫🏻 | ❤️ Snehan Weds Kannika 😍 | HD