மிரள வைக்கும் வகையில் பீஸ்ட் படத்தின் செட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Beast Movie Set Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் படத்தின் இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் செட் வடிவமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. மால் போன்ற இந்த செட் மிக பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ‌

https://twitter.com/IamJasonSanjay/status/1488136900284014593?t=5nm_Uz3_TLpqrc3lLbbwAA&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.