YouTube video

Dubbing Artist Of Vijay Tv Mahabharatham Tamil Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் மகாபாரதம். இந்தியில் ஒளிபரப்பான இந்த மெகா தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்த இந்த சீரியலில் நடித்த நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்த தமிழ் நடிகர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான சகுனிக்கு விஜய் டிவியில் வேலை செய்யும் கோபி நாயர் என்பவர் தான். இந்தக் குரல் சகுனியின் கதாபாத்திரத்திற்கு அச்சு அசலாக அப்படியே பொருந்தி இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மகாபாரத சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் திரௌபதி தான். இந்த சீரியலில் திரௌபதிக்கு குரல் கொடுத்தவர் ஜெய கீதா. விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி குரல் கொடுத்தவர் தான்.

மேலும் பிதாமகன் சங்கீதா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு மண இவர் குரல் கொடுத்துள்ளார்.

அதேபோல் இந்த சீரியலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் செந்தில்குமார் என்பவர்.

இவர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதாகிருஷ்ணா சீரியலில் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்துள்ளார். இதனால் மகாபாரத சீரியலிலும் கிருஷ்ணருக்கும் இவரே குரல் கொடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.