அவ மட்டும் கையில கிடைச்சா அடிச்சு சாவடிச்சிடுவேன் என ஜூலி கொந்தளிப்புடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

BB Julie Blast PSBB Teacher : சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அம்பலமாகி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு மாணவிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

அவன் மட்டும்  கையில கிடைச்சா அடிச்சே சாவடிச்சிடவேன் - கொந்தளித்த பிக் பாஸ் ஜூலி, ஏன் தெரியுமா?

மக்கள் பலரும் அந்த ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். இந்த காலத்தில் மாணவிகளுக்கு எது சரி எது தவறு என தெரியும். நெட்பிளிக்ஸ் இணையதளங்களில் அடல்ட் படங்களை பார்க்கிறார்கள். தவறு நடக்கிறது என தெரிந்ததும் வெளியே கூறியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது என கூறியுள்ளார்.

நீ எல்லாம் மனுஷ ஜென்மமா?? கைல மட்டும் கிடைச்சா அடிச்சு கொன்னுடுவேன் என ஜூலி ஆசிரியரைப்பற்றி ஆவேசமாக பதிவு செய்துள்ளார். ‌‌