பணம் எடுக்க வங்கிகளுக்கோ அல்லது ஏடிஎம்-மிற்கோ செல்லாமல் வீட்டிற்கு பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் வசதிகளை பொதுத்துறை வங்கிகள் அறிமுகம் செய்யவுள்ளன.

பணம் எடுத்தல், செலுத்துதல், டிடி எடுத்தல், பாஸ்புக் வாங்குதல், கணக்குகளை பதிவிடுதல், காசோலை வாங்குதல், உள்ளிட்ட சாதாரண பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வங்கி பணிகளையும் வீட்டிற்கே வந்து செய்து கொடுக்கும் வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தியது.

தற்போது யுகோ வங்கி அதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவுள்ளனர். முதலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், படிப்படியாக அனைவருக்கும் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தபடவுள்ளது. யுகோ வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் இதை நடைமுறைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.