Web Ads

ஃபயர் படத்தின் வெற்றிக்காக பாலாஜி முருகதாஸிற்கு தயாரிப்பாளர் கொடுத்த கிஃப்ட்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

ஃபயர் படத்தின் வெற்றிக்காக பாலாஜி முருகதாஸிற்கு தயாரிப்பாளர் கிப்ட் கொடுத்துள்ளார்.

Balaji Murugadoss gifted by the producer for the success of Fire..
Balaji Murugadoss gifted by the producer for the success of Fire..

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவரது நடிப்பில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் ஜே சதீஷ் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் ரட்சித்தா மகாலட்சுமி,சாக்ஷி அகர்வால்,சாந்தினி தமிழரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சந்தோஷத்தில் தயாரிப்பாளர் பாலாஜி முருகதாஸிற்கு தங்கச்செயின் ஒன்று பரிசளித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாக பேசி பகிர்ந்துள்ளார் பாலாஜி முருகதாஸ். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.