செழியன் கோபியை வீட்டுக்கு அழைத்து வர அடுத்த நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட் கோபி குடித்துவிட்டு குடிபோதையில் நிதானம் தெரியாமல் இருக்க செழியன் அவரை காரில் அழைத்து வந்தார். ‌‌

இந்த நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கோபி ராதிகா வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போகாதே என சொல்ல செழியன் கோபியை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

இதை பார்த்த ஈஸ்வரி அவனை ரூமுக்கு கூட்டிட்டு போ என சொல்ல எழில் அவர் எதுக்கு இங்க வரணும், அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என சத்தம் போட ஈஸ்வரி அவன் இந்த வீட்டை விட்டு போயிட்டா இந்த வீடு அவனது இல்லாமே ஆகிடுமா என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

இதனால் பாக்கியா என்ன சொல்வது என தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இன்னொரு பக்கம் ராதிகாவின் அம்மா கோபி அந்த வீட்டுக்கு போனால் நீயும் அவரோடவே போ என சொல்லி இருப்பதால் வரும் நாட்களில் ராதிகாவும் ஈஸ்வரி வீட்டிற்கு கிளம்பி வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.