
பாக்கியா ஷாக் கொடுக்க வீட்டுக்கு வந்து அவமானப்படுத்தி உள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா நடந்து சென்று கொண்டிருக்கும்போது கோபி கேரளாவில் இருக்கும்போது போன் செய்து செய்த டார்ச்சர்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

உடனடியாக பாக்கியா கோபியின் ஆபீசுக்கு செல்ல அங்கே வேலை செய்யும் சுரேஷ் கோபியிடம் சென்று சார் உங்க வைஃப் வந்து இருக்காங்க என்று சொல்ல கோபி ராதிகா என நினைத்து உள்ளே வர சொல்கிறார். உள்ளே வந்த பாக்கியாவை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார்.
கேரளாவில் இருக்கும் போது அவ்வளவு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிங்களே நான் அடுத்து குடும்பத்தில் உள்ள எல்லாரையும் கூட்டிட்டு டூர் போக போறேன் அப்போ இன்னும் டென்ஷன் ஆகாதீங்க என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். கோபிக்கு அடுத்தடுத்து நோஸ்கட் கொடுத்து அங்கிருந்து பாக்கியா கிளம்ப இடியட் இடியட் என செம டென்ஷன் ஆகிறார் கோபி.

அதனைத் தொடர்ந்து கோபி ஆபிஸ் முடித்து வீட்டுக்கு வந்ததும் நேராக பாக்யாவின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரியிடம் நலம் விசாரித்து விட்டு பாக்யா ஆபீஸ் வந்து தன்னிடம் வம்பு இழுத்த விஷயத்தை சொல்ல அனைத்திற்கும் பதிலடி கொடுக்கிறார் பாக்கியா. பிறகு உன்னுடைய லைசென்ஸ் அந்த பழனிச்சாமி கிட்ட எதுக்கு போச்சு? அவன் எதுக்கு வீட்டுக்கு வரான் என்ன சம்பந்தம் என கேள்வி மேல் கேள்வி கேட்டு பாக்யாவுக்கு கொடைச்சல் கொடுக்கிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.