கண் கலங்கிய செழியன், பாக்யா சொன்ன விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
செழியன் கண்கலங்க, பாக்யா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியனை ஜெயிலிலிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போகும் சந்தோஷத்தில் போக திடீரென வழிமறித்து கவுன்சிலர் உன்னை சாதாரண பொம்பளன்னு நினைச்சுட்டேன் ஆனா இவ்வளவு பெரிய வேலை பார்த்துட்ட இல்ல உன்ன நான் சும்மா விடமாட்டேன் மினிஸ்டர் கிட்ட எனக்கு நல்ல பேர கெடுத்துடல இதுக்கு மேல நீ எவ்வளவு பிரச்சனையை சந்திக்க போறேன்னு மட்டும் பாரு உன்னை சும்மா விட மாட்டேன் என வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.
பிறகு இவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கு இன்ஸ்பெக்டர் இடம் என் பயண வெளியே விடுங்கள் சார் என்று சொல்ல உட்காருங்கள் நீங்க ஏன் மினிஸ்டர் உனக்கு தெரிஞ்ச ஆளுன்னு சொல்லல என்று சொல்ல தெரியும் பையன் மட்டும் கொஞ்சம் வெளியே விடுங்கள் என்று பாக்கியம் சொன்னவுடன் கொஞ்ச நேரத்தில் செழியனை அழைத்து வருகின்றனர் பிறகு கையெழுத்து போட்டு விட்டு செழியனை அழைத்துச் செல்ல வெளியில் வந்த உடன் செழியன் வெளியே வர மாட்டேன்னு நெனச்ச என்று சொல்ல உன்னை வெளியே கூட்டிட்டு வர அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு தெரியுமா தம்பி என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் பெருமாள் வர நீங்க என்ன சார் இங்க என்று கேட்க அந்த ஏழுமலை கேசை வாபஸ் வாங்கினானா இல்லையா என்பதை பற்றி கேட்க தான் வந்தேன் என்று சொல்ல வாங்கிட்டாரு அதனாலதான் என் பையன் வெளியே வந்து இருக்கான் உங்களுக்கு ரொம்ப நன்றி என்று சொல்ல அவனுடைய உண்மை முகத்தை காட்டுனதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் என்று அவர் சொல்லுகிறார்.
செழியன் இடம் பையனுக்காக எதுவெல்லாம் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இவங்கள நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் என் உடம்பை சிலுத்துப் போச்சு உன்னை வெளியே கொண்டு வரதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா என்று சொல்லுகிறார் உடனே செழியன் கண்கலங்கி நிற்க அவர் உள்ளே போனவுடன் செல்வி மினிஸ்டர் வீட்டில் 150 பேருக்கு சமைச்சு கொடுத்து அவர்கிட்ட பேசி தான் அக்கா பிரச்சனையை தீர்த்து இருக்கு என்று சொல்லுகிறார். உடனே பாக்யா இவங்கள அதிகமா சொல்றாங்க அதெல்லாம் ஒண்ணுமே இல்ல சரியா உன்னை எப்படி நான் ஜெயில்ல இருக்க விட முடியும் என்று சொல்ல செழியன் பாக்கியாவை கட்டிப்பிடித்து கண்கலங்குகிறார். சரி நீ வீட்டுக்கு போலாம் ஹோட்டலுக்கு போயிட்டு வரேன் என்று செல்வியும் பாக்யாவும் ஹோட்டலுக்கு வர அங்கு பொருட்கள் உடைந்து இருப்பதை எடுத்து வைக்கின்றனர்.
செல்வின் வீட்டுக்கு போக்கா நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லி பாக்யாவை அனுப்பி வைக்க செழியன் உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றனர் பாக்யா வந்தவுடன் ஈஸ்வரி வழக்கம் போல் இதுதான் உன்னோட பையன் மூத்த பையன் செழியன் இவன் எப்படி போனாலும் உனக்கு பிரச்சனை இல்லை உனக்கு வேலை தான் முக்கியம் இப்பவே எங்க போயிட்டு வரா தெரியுமா ஒரு ஃபங்ஷன்ல சமைச்சுட்டு வரா என்று திட்ட பாக்கியா நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி எனக்கு என்னோட பசங்க தான் முக்கியம் அவங்க தான் என்னோட உலகம் என்று சொல்லிவிட்டு கண்கலங்கி சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் கோபி மற்றும் ஈஸ்வரி கோவிலுக்கு சென்று வந்து செழியனுக்கு விபூதி வைக்கின்றனர் அவரையும் கூப்பிட்டு விபூதி கொடுத்துவிட்டு ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
