Pushpa 2

வருத்தப்பட்டு கண்கலங்கும் எழில், சந்தோஷப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் எழில் இருக்க, கோபி சந்தோஷமாக இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இனியா என மூவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு வர ஆனால் அம்மா வராது மட்டும்தான் ஒரு குறையா இருந்துச்சு அவங்களுக்கு இப்பெல்லாம் பசங்க மேல அக்கறை இல்ல பிசினஸ் தான் முக்கியமா போச்சு. அண்ணா எவ்வளவு வருத்தப்பட்டுச்சு அங்க அம்மா வரலன்னு சொல்லி என்று பேசிக்கொண்டு வர ஜெனி பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார் பிறகு ஜெனி நம்ம ரெஸ்டாரண்ட் போய் பார்க்கலாமா என்று கேட்க நம்ம எதுக்கு ரெஸ்டாரண்ட் போகணும் அவங்களுக்கு பசங்கள விட ரெஸ்டாரன்ட் முக்கியம் இருக்கும்போது நம்ம எதுக்கு போகணும் என்று சொல்லி இனியாவிடம் நீ அம்மாவ பாக்கணுமா இனியா என்று கேட்க வேணாம் பாப்பா கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லுகிறார் உடனே செழியனும் சரி என சொல்லி விடுகிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

மறுபக்கம் எழில் தூங்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அமிர்தா என்னாச்சு எழில் என்று கேட்கிறார் பிறகு ரெஸ்டாரண்டில் நடந்த விஷயத்தையும் பாக்யாவை வரவேண்டாம் என்று சொன்ன விஷயத்தையும் சொல்லுகிறார். இதனால் அமிர்தா நீங்க பண்ணது மிகப்பெரிய துரோகம் நீங்க அந்த இடத்துல எங்க அம்மாவை விட வேற எதுவும் முக்கியம் இல்லன்னு சொல்லியிருந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் ஆனா இப்படி பண்ணது எனக்கு ரொம்ப மன வருத்தமா இருக்கு எழில் என்று சொல்கிறார். அதற்கு எழில் அம்மா இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் போது என்னால பினான்சியலா எதுவும் ஹெல்ப் பண்ண முடியல உனக்கும் நான் உன்னையும் நிலா பாப்பாவையும் சரியா பாத்துக்க முடியல என்று சொல்ல அதெல்லாம் எங்களுக்கு தேவையில்ல நாங்க யோசிக்கவோ இல்ல ஆனா நீங்க பண்ணது மிகப்பெரிய தப்பு என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார்.

அமிர்தா பேசியதையெல்லாம் நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார். ரெஸ்டாரண்டில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரியும் உதவி செய்ய நீங்க எதுக்கு அத்தை இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லுகிறார் இருக்கட்டும் பாக்யா என்று சொல்ல டீ குடிக்கிறீங்களா என்று கேட்கிறார் கொடுத்தா நல்லா தான் இருக்கும் என்று சொல்ல பாக்யா எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுத்து வேலைகளை பார்க்க கை மற்றும் இடுப்பு வலியுடன் வேலை செய்வதை ஈஸ்வரி பார்த்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் கோபி இந்த செழியனும் இனியாவும் நான் நல்லது பண்ணாலும் பண்ணினாலும் என் கூட இருக்காங்க ஆனா இந்த எழில் மட்டும் நான் நல்லதே பண்ணாலும் அந்த இடியட் பக்கம்தான் பேசுறான் என்று புலம்பி கொண்டிருக்க இருக்கட்டும் இவன் மூலமாகவே அந்த இடியட்டை பாத்துக்குறேன் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகா வந்து எதுக்கு தனியா புலம்பி கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். பிறகு பைத்தியம் முத்தி போயிடுச்சு என்று சொல்ல சும்மா சொன்னேன் என்று ராதிகாவிடம் சந்தோஷமாக பேச என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க என்று கேட்கிறார். ஆமா என்னோட பையனோட ஆசையை நிறைவேத்திட்ட அதுவும் இல்லாம நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக பாக்கியலட்சுமி அந்த பங்க்ஷனுக்கு வரவிடாம பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். பாக்கியலட்சுமி டைட்டில் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்க தெரியாது தெரிந்து இருந்தா வச்சுக்கவே விடமாட்டேன் என்று சொல்ல அதற்கு நீங்க என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் நான் ஒரு வார்த்தை சொன்னால் ப்ரொடியூசர் கேப்பாரு அதையும் மாத்திடுவேன் என்று சொல்லுகிறார் கோபி.

நீங்க ஏன் இவ்வளவு சேடிஸ்டா பிகே பண்றீங்க கோபி என்று ராதிகா கேட்க என்ன எவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்கா எங்க அப்பாவோட இறுதி சடங்கு கூட பண்ண விடல இதெல்லாம் ரொம்ப கம்மி, என்று சொல்லுகிறார் கோபி. உடனே ராதிகா அட்வைஸ் செய்ய வர இந்த அல்ப சந்தோஷத்தை அனுபவிச்சுக்கிறேன் நீ போய் ரெஸ்ட் எடுமா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ரெஸ்டாரன்ட் பாக்கியா எப்படி வேலை செய்து கொண்டிருக்கிறார்?என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update