பாக்கியாவிடம் மனம் விட்டு பேசும் ராதிகா, நடக்கப் போவது என்ன? வைரலாகும் ப்ரோமோ..!
பாக்யாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வர பாக்யா அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார்.
இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வர அவர் ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் ஈஸ்வரி அவரை கோபமாக பேசி அனுப்பி வைக்கிறார். இதனால் மனமுடையும் ராதிகா பாக்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறார்.
பாக்யாவிடம் கோபி உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்தாராம். நான் சந்தோஷமா இல்ல பாக்யா, நான் ஏன் இந்த கல்யாணம் பண்ணனு யோசிக்கிறேன் என்று சொல்லி அழ பாக்யா நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க என்று ஆறுதல் சொல்லுகிறார்.
இனி என்ன நடக்கப் போகிறது என்று வரும் எபிசோடுகளை பார்த்து தெரிந்து கொள்வோம்.