சமையலில் நடந்த சொதப்பலால் பாக்யா கைதாக உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனிய ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்கும் விஷயம் தெரிந்து குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இன்னொரு பக்கம் பாக்கியா இனியாவை தொடர்பு கொள்ள முடியாமல் ரிசல்ட் என்ன ஆச்சு என தெரியாமல் தவித்து வருகிறார்.

பிறகு இனியா செழியன் ஆகியோர் காரில் கிளம்பி ஸ்கூலுக்கு வந்து கொண்டிருக்கிற மறுபக்கம் கோபி மற்றும் ராதிகா காரில் வந்திருக்கும் கொண்டிருக்கும் போது கோபி கையில் போனையே வைத்துக்கொண்டு இனியா ரிசல்ட் பற்றி யோசித்துக்கொண்டே வண்டி ஓட்ட ராதிகா இதுக்கு நீங்க அவகிட்டையே கேட்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

பிறகு கோபி இனியாவுக்கு போன் செய்து ரிசல்ட் பற்றி விசாரிக்க அவர் 596 மார்க் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என சொல்ல ஆனந்த கண்ணீர் விட்டு சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். மேலும் இனியா ஸ்கூலுக்கு வர சொல்லி போனில் வைக்க கோபியும் ராதிகாவும் சந்தோஷத்துடன் ஸ்கூலுக்கு கிளம்பி வருகின்றனர்.

அடுத்ததாக பாக்கியா சமைக்க வந்த இடத்தில் சாப்பாடு சரியில்லை என மாப்பிள்ளை விட்டார் பெண் வீட்டாரிடம் இந்த சம்பந்தம் வேண்டாம் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் அவமானப் படுத்துற மாதிரியே நடந்து இருக்கீங்க என சத்தம் போட்டுக் கொண்டிருக்க பாக்கியா விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

ஸ்கூலுக்கு வந்த இனியாவுக்கு மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். மேலும் கோபி ஓடி வந்து என் பொண்ணு என இனியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். ராதிகாவும் இனியாவுக்கு கங்கிராஜுலேசன் சொல்கிறார்.

அடுத்ததாக சமைக்க வந்த இடத்தில் பிரச்சனை பெரிதாக பெண்ணின் மாமா ஆரம்பத்தில் இருந்தே நீங்க செல்பி எடுக்கறது தான் கூறிய இருந்தீங்க, சரியா சமைக்கல இந்தக் கல்யாணம் மட்டும் நிக்கட்டும் உங்கள் சும்மா விடமாட்டேன் போலீஸ்ல புகார் கொடுத்து கைது பண்ண வைப்பேன் என எல்லாரையும் கூப்பிட்டு ஒரு ரூமில் உட்கார வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.