அமிர்தா விஷயத்தில் எழில் உறுதியான முடிவை எடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 17.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இடம் அப்பாவுக்கு போன் பண்ணி தீபாவளிக்கு வர சொல்லு என கூறுகிறார். கோபி வருவாரு நா அவருக்கு ஊர்தான் புடிச்சிருக்குனா அவர் அங்கேயே இருக்கட்டும். அவரோட ஃப்ரெண்ட்ஸ் பாப்பாரு, அவர்கிட்ட படிச்ச ஸ்டுடன்ட்ஸ்ஸ் வந்து பார்ப்பாங்க. அவருக்கு அங்கு சந்தோஷமாய் இருக்குனா அவர் அங்கேயே இருக்கட்டும். உங்களுக்கு ஊர் பிடிக்காதுல, நீங்க இங்கேயே இருங்க என கோபி சொல்கிறார். ஈஸ்வரி பாட்டி நான் அவரை வரச் சொல்வ என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு பாக்கியம் வீட்டிற்கு அவருடைய சகோதரரின் மனைவி அம்மா மற்றும் சகோதரரின் குழந்தை ஆகியோர் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ஈஸ்வரி பாட்டியின் இவர்களிடம் வந்து பேசுகிறார். பிறகு எழில் தன்னுடைய அத்தையிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்க மாமா இறந்த பிறகு வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கணும் என கூறுகிறார். அப்போது அது எல்லாம் எடுத்து செய்ய யாரும் இல்லை. இப்போகூட பண்ணிக்கலாம் என சொல்ல இவ்வளவு பெரிய பொண்ணு வைத்துகிட்டு எப்படி கல்யாணம் பண்றது என்ன பேசுகிறார்.

இந்தியா-நியூசிலாந்து மோதல் : கேன் வில்லியம்சன் விலகல்.. புதிய கேப்டனாக டிம் சவுதி..

அமிர்தா விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. குடும்பத்தார் ரியாக்ஷன் என்ன? - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு ஏழில் இப்படி அமிர்தா ஒரு போதும் கஷ்டப்பட கூடாது. அவங்க தனியா இருக்க கூடாது என முடிவு செய்து அவர்களை திருமணம் செய்துகொண்ட வேண்டும் என உறுதியாக முடிவெடுக்கிறார். பிறகு அவருடைய நண்பர் பேசிக்கொண்டிருக்கும்போது அமிர்தா வேண்டாம் விட்டுவிடு. ரெண்டு மூணு நாளைக்கு அப்படித்தான் கஷ்டமா இருக்கும். அதுக்கப்புறம் நீ கிரேட் எஸ்கேப்னு நினைப்ப என சொல்ல நான் அமுதாவை கண்டிப்பாக கல்யாணம் பண்ணிப்பேன். அவங்களோடு சேர்த்து அந்த குழந்தையும் விரும்ப போறேன் அவ்வளவுதான் என கூறுகிறார்.

பிறகு எழில் அமிர்தா வீட்டிற்கு செல்கிறார். அவருடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அமிர்தாவும் வந்து அமர குழந்தை எங்கே என கேட்கிறார். அம்மா குளிக்க வைத்து கிட்டு இருக்காங்க என கூறுகிறார். பிறகு குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். அப்போது குழந்தை எழில் கிட்ட இருக்கிறதை பார்க்கும் போது அப்படியே என் பையன் கணேஷ் கிட்ட இருக்கிற மாதிரியே இருக்கு என்கிறார். கணேஷ் மாதிரி இல்லம்மா நான் கணேஷே தான் என கூறுகிறார் எழில். அமிர்தாவின் முகம் மாறுகிறது.

Cooku With Comali புகழாக பார்க்காதீங்க – Santhanam வேண்டுகோள்..! |

இந்தப் பக்கம் பாக்கியா செழியனுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். செழியன் நான் செய்தது தான் தப்பு. ஜெனி இல்லாம கஷ்டமாக இருக்கு என சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது இனியா வந்து ஜெனியிடம் அக்கா வந்து விடுவாங்க கவலைப்படாத அண்ணா என சொல்கிறார். பிறகு ஈஸ்வரி பாட்டி போனில் பேசிக் கொண்டு வந்து உங்க தாத்தா தீபாவளிக்கு வரேனு சொல்லிட்டாங்க என சந்தோஷமாக கூறுகிறார். அப்போது பாக்கியா ஜெனியை கூப்பிட வேண்டாமா என கேட்க நீ வாயை மூடிட்டு சும்மாவே இருக்க மாட்டியா என திட்டுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.