என் பையனுக்கு குழந்தை பிறக்க போதுனு நான் எப்படி சொல்லுவேன் என பாக்கியாவிடம் ஃபீல் செய்துள்ளார் கோபி‌.

Baakiyalakshmi Serial Episode Update 16.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி கர்ப்பமாகி இருப்பது குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. காலையில் எழுந்து வந்த ஜெனியை பாக்யாவின் மாமியார் அழைப்பு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என அவருக்கு அறிவுரை வழங்குகிறார். குழந்தையை மட்டும் பெற்றுக்கொடு அத நாங்க பாத்துக்குறோம் என கூறுகிறார்.

என் பையனுக்கு குழந்தை பிறக்கப்போதுனு நான் எப்படி சொல்லுவேன்.. பாக்கியாவிடம் ஃபீல் பண்ணும் கோபி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

ஆனால் செழியனோ இப்போதைக்கு குழந்தை வேண்டுமா வேண்டாமா என்பதை நாம யோசித்து முடிவெடுக்கலாம். அதற்குள்ளே வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்ட. வீட்ல இருக்கவங்க சந்தோஷமா இருக்காங்க என்பதற்காக நம்மளோட வாழ்க்கையை மாத்திக்க முடியாது என கூறுகிறார்.

Thalaivii படத்தின் முதல் மூன்று நாள் BoxOffice Collection Report – முழு விவரம் | Kangana Ranaut | HD

காலையில் கோபி செழியன் மற்றும் ஜெனிக்கு வாழ்த்துக் கூறுகிறார். வேலைக்கு போகப் போறியா என கோபி கேட்டதற்கு வேலைக்கு போகப் போவதாகச் செழியன் கூறுகிறார். பாக்யா இப்போ எப்படி முடியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து போகலாம் என சொல்ல ஜெனியும் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் என கூறுகிறார்.

இதனை அடுத்து அவர்கள் இருவரும் மேலே சென்றதும் பாக்கியாவிடம் கோபி ஏன் பாக்கியா ஜெனிக்கு குழந்தை பிறந்ததும் நாம தாத்தா பாட்டி ஆகி விடுவோமா என கேட்கிறார். இதுல என்னங்க சந்தேகம் ஆமா என சிரித்துக்கொண்டே கூறுகிறார் பாக்கியா. எனக்கு இப்போ நாற்பத்தி ஏழு வயசு தான் ஆகுது. என் ஃப்ரெண்ட்ஸோட பசங்க இப்ப தான் 10வது 11வது படிக்கிறாங்க. நான் எப்படி என் பையனுக்கு குழந்தை பொறந்திருக்கு நான் தாத்தாவாகிட்டேன் என்று சொல்ல முடியும். எது எப்படி இருந்தாலும் நீங்க தாத்தா தான் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பாக்கியா.

அதன் பின்னர் சாப்பாடு டெலிவரி கொடுக்க போன இடத்தில் அந்த வீட்டு பெண்மணி பாக்கியாவை அழைத்து பேசுகிறார். அதாவது நீங்க கொடுக்கற சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு பாக்யாவுக்கு நன்றி கூறி காபி கொடுத்து அனுப்புகிறார். தன்னுடைய சாப்பாட்டுக்கு பாராட்டு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொள்கிறார் பாக்கியா. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.