பாக்கியாவின் பெயருக்கு வீட்டை மாற்ற கேன்டினில் வைத்து ராதிகா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா எழில் மற்றும் ராமமூர்த்தி என நாள் வரும் ரெஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்க பாக்கியா திரும்பவும் வீட்டை உங்கள் பெயரிலேயே எழுதிக்கோங்க மாமா என்று சொல்ல ராமமூர்த்தி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

அப்படின்னா பசங்க பேர்ல எழுதிடலாம் என்று சொல்ல எல்லாருக்கும் குடும்பம்னு ஆயிடுச்சு உனக்குன்னு ஒரு பிடிப்பு இருக்கணும் என சொல்லி பாக்கியாவின் பெயரிலேயே எழுத சொல்கிறார். அடுத்ததாக ரெஜிஸ்டர் ஆபீஸ் இருவரும் போட்டோ எடுத்து கையெழுத்து வாங்கி வீடு பாக்யாவின் பெயருக்கு மாற்றப்படுகிறது.

அதன் பிறகு கோபி வெளியே வந்து நின்று கொண்டிருக்க எழில் இனிமே உங்களுக்கு மாத வீட்டுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது தப்பி தவறி கூட அந்த பக்கம் வந்துடாதீங்க என்று சொல்கிறார். ராமமூர்த்தி குடி பாதையில் வந்து தெரியாம வந்துட்டேனே எந்த காரணத்தை சொல்லியும் வந்துடாத என எச்சரித்துவிட்டு கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து எழில் பெரிய போர்டில் பாக்யாவின் இல்லம் என எழுதி எடுத்து வந்து வெளியில் மாட்டப் போவதாக சொல்ல பாக்கியா இதெல்லாம் வேண்டாம் வேணும்னா வீட்ல இருக்க எல்லாருடைய பேரையும் போட்டு மாட்டு என்று சொல்ல ராமமூர்த்தி எழிலும் பாக்யாவை அமைதியாக்குகின்றனர்.

இந்த நேரம் பார்த்து கோபியும் ராதிகாவும் வீட்டில் இருந்து வெளியே வர போர்டு மாற்றப்படுவதை பார்த்து கோபி டென்ஷன் ஆகிறார். இங்கே எல்லோரும் போடுடன் போட்டோ எடுத்துக்கொள்ள கோபி சண்டைக்கு வர ராதிகா தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ள அசிங்கப்பட்டது போதாதா இப்போ வெளியேவும் அசிங்கப்படணுமா வாங்க போகலாம் என்று சொல்லி கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

அடுத்ததாக அமுதாவின் அப்பா அம்மா வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் கேண்டினில் செல்வி தோசை பிளேட்டை மாற்றி வைத்துவிட ராதிகா கோபப்படுகிறார். பாக்யா இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காது என சொல்ல வீட்டு பிரச்சனையில் நடந்த விஷயங்களை பற்றி சொல்லி கோபப்படும் ராதிகா உங்கள இந்த கேன்டீனை விட்டு இன்னும் கொஞ்சம் நல்ல வெளியே துரத்துறேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.