பாக்கியலட்சுமி சீரியலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Baakiyalakshmi Serial Controversy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பெரிய அளவில் படிப்பறிவில்லாத இல்லத்தரசியான பாக்கியா குடும்பத்தாரால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு எப்படி ஜெயித்து காண்பிக்கிறார் என்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் இனியா படிக்கும் பள்ளியில் அவருக்கும் அவரது தோழிகளுக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் இந்த சீரியலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிரிக்கெட் சர்க்கார் : கபில்தேவ் சாதனையை முறியடிக்க, அஸ்வின் இன்று தீவிரம்..

அதாவது இந்த சீரியல் இயக்குனருக்கு அடுத்து கதையை எப்படி கொண்டு போவது என தெரியவில்லை. அதனால் சமூகத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் பாலியல் தொல்லையை வைத்து சீரியலை நகர்த்த முயற்சி செய்கிறார். இது போன்ற காட்சிகள் பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களையும் தவறாக சித்தரிப்பது போல இருக்கிறது என சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ஒரு படம் பார்த்து – திரை பிரபலங்கள் கொண்டாடும் Anandham Vilayadum Veedu.!