பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார் ரித்திகா தமிழ் செல்வி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா தமிழ்ச்செல்வி.

எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இவர் தற்போது திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் அக்ஷிதா அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக அக்ஷிதா அமிர்தா போன்ற கெட்டப்பில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ