இனி அவர் எங்களுடன் இல்லை என கண்ணீருடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெள்ளித்திரையில் டான்ஸ் மாஸ்டராக வலம் வந்தவர் சின்னா. பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இவரின் மகள் தான் நந்திதா ஜெனிஃபர். நடிகை டான்ஸர் என பன்முகத்திறமை கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அவர் இனி எங்களுக்கு இல்லை.. கண்ணீரோடு பாக்கியலட்சுமி ஜெனிஃபர் வெளியிட்ட வீடியோ - என்னாச்சு??

இந்த கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடம் பிடித்தார். ஆனால் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். சீரியலை விட்டு விலகிய ஜெனிபர் மீண்டும் எப்போது ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் கண்ணீருடன் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் இனி எங்களுக்கு இல்லை.. கண்ணீரோடு பாக்கியலட்சுமி ஜெனிஃபர் வெளியிட்ட வீடியோ - என்னாச்சு??

அந்த வீடியோவில் தன்னுடைய தந்தை சின்னா அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக தான் இருந்தார் அவருக்கு வேறு எதுவும் பிரச்சனைகள் இல்லை என கண்கலங்க கூறியுள்ளார். தன்னுடைய தந்தையின் ஆத்மா சாந்தியடைய அனைவரையும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவருடைய இந்த உருக்கமான வீடியோ ரசிகர்களையும் கண்கலங்க வைத்து வருகிறது.