ராதிகாவுடன் ஹனிமூன் சென்ற இடத்தில் கோபிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்தான நிலையில் கோபி ராதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பாக்கியா சமைக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ராதிகாவின் திருமணத்தில் கோபியின் அப்பா அம்மா உள்ளிட்டோர் வந்து பிரச்சனை செய்தனர்.

இது என்ன ராதிகாவுடன் ஹனிமூன் போன இடத்தில் கோபிக்கு வந்த சோதனை, ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட விடுங்கடா... வைரலாகும் வீடியோ

அதை எல்லாம் தாண்டி ஒரு வழியாக திருமணம் முடிந்த நிலையில் இருவரும் தற்போது ஹனிமூன் செல்ல உள்ளனர். இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஒரு திருமணத்திற்காக அதே இடத்துக்கு வர மெகா சங்கமும் என்ற பெயரில் இரண்டு சீரியல் ஒரு மணி நேரம் எபிசோட் ஆக ஒளிபரப்பாக உள்ளது.

இது என்ன ராதிகாவுடன் ஹனிமூன் போன இடத்தில் கோபிக்கு வந்த சோதனை, ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட விடுங்கடா... வைரலாகும் வீடியோ

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாக அந்த வீடியோவில் கண்ணன் கோபியை பார்த்துவிட்டு ரூமுக்குள் செல்ல அங்கு ராதிகா இவர்களைப் பார்த்து அதிர்ச்சடைகிறார். எங்க போனாலும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களாடா என கோபி புலம்புகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கோபிக்கு இதெல்லாம் தேவைதான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Pandian Stores - Baakiyalakshmi | Maga Sangamam - Promo