சமையலில் சொதப்பிய பாக்யாவின் டீமால் ராதிகா பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கேண்டினில் எல்லோரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு காலேஜ் கிளம்பிச் செல்ல அங்கு இனியாவின் தோழி என் கூட படிச்ச பையன் இப்போ வேற காலேஜ்ல சேர்ந்துட்டான், அவன் திடீர்னு எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்றான் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல என்று சொல்ல அதற்கு பாக்கியா தகுந்த தீர்ப்பை கூறுகிறார்.

அடுத்ததாக பாக்யா கிளாசுக்கு கிளம்பி விட இந்த பக்கம் செல்வி தன்னுடைய கணவர் குடித்துவிட்டு பிள்ளைகளை அடித்து விட்டதால் போனில் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க காலிஃப்ளவர் 65 போல பண்ணுவார்கள் அதை கருக விட்டு எடுத்து விடுகின்றனர்.

பிறகு செல்வி ரைட்டாவில் உப்பு போடலையே என்று திரும்பவும் உப்பை போட்டு விட சாப்பிட வந்தவர்கள் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சொல்ல பெரிய பிரச்சினையாகிறது. இங்கே பழனிச்சாமி பாக்கி அதை சந்தித்து கிளாசில் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கும் அப்போது செல்வி போன் செய்து நீ உடனே கேன்டீன் கிளம்பி வா இங்க பெரிய பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்கிறார்.

கேண்டினில் ராதிகா பாக்யாவின் டீமை லிப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்க அப்போது பாக்கியா ஓடி வருகிறார். பாக்யா நடந்த விஷயங்களை கேட்டு மன்னிப்பு கேட்க ராதிகா மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் எல்லாம் முடிந்துவிடுமா என்று ஆவேசம் அடைந்து திட்டுகிறார்.

இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சுடுங்க என்று பாக்கியா கேட்க இந்த ஒரு முறையா இன்னும் இந்த கேண்டின் உங்ககிட்ட இருக்கும்னு நம்பிகிட்டு இருக்கீங்களா? இதோட காலி பண்ணிக்கிட்டு கிளம்ப வேண்டியதுதான், கோடீஸ்வரன் சார் கிட்ட நான் எல்லாத்தையும் பேசிட்டேன் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

பிறகு உங்களை நம்பி விட்டுட்டு போனது என்னுடைய தப்பு தான் என தலையில் அடித்துக் கொண்டு பாக்கியா அழ செல்வி எல்லாம் என்னால தான் மன்னித்துவிடு அக்கா என்று அழுது மன்னிப்பு கேட்கிறார். இந்த மாதிரி தப்பு பண்ணா நம்பள பிடிச்சு கீழ தள்ளிடுவாங்க நம்மள மாதிரி சாதிக்க நினைக்கிற பொண்ணுங்கள எல்லாரையும் பொண்ணுங்கனாலே இப்படித்தானு முன்னேற விட மாட்டாங்க என்று அழுது புலம்ப பழனிச்சாமி இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.