
கோபியை அடுத்தடுத்து ராதிகா அவமானப்படுத்துகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மசாலா கம்பெனி இருக்கும் வீட்டை ஓனர் காலி செய்த விஷயம் பற்றி ராமமூர்த்தி சொல்ல பாக்யா ஏற்கனவே போன் பண்ணி சொல்லிட்டார் மாமா என சொல்கிறார். செல்வி இப்ப என்ன அக்கா பண்றது என சொல்லு எனக்கும் எதுவும் புரியல ஆனா நிச்சயம் திரும்பவும் நாம மேல வருவோம் என பாக்கியா நம்பிக்கையாக பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்யா பழனிச்சாமி சந்திக்க வர அங்கு இவர் தனக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து சொன்னதும் அவர் பணம் கொடுத்து உதவி செய்யவா என்று பாக்கியா வேண்டாம் சார் எதாவது கேட்டரிங் ஆர்டர் இருந்தா மட்டும் சொல்லுங்க என கூறுகிறார்.
பிறகு பாக்கியா வீட்டுக்கு வந்து மசாலா கம்பெனி இருந்த இடத்தை காலி செய்து பொருட்களை எடுத்து வந்து பார்க்கும் ஏரியாவில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி இதை பார்த்து என்ன இதெல்லாம் இங்கே இப்படி பொருளை வச்சா கார எங்க நிக்கிறது அம்மாவுக்கு தெரியுமா இதெல்லாம் என்று ஈஸ்வரியிடம் சென்று பேச விடு கோபி மசாலா கம்பெனி காலி பண்ணியாச்சு அவ பொருள் எல்லாம் எங்க வைப்பா? வெளியில தான் அவ்வளவு இடம் இருக்குல காரை அங்க நிறுத்து என சொல்ல வெளியவிட்டா ஸ்ராட்ச் ஆகிடும் என சொல்கிறார்.
ராதிகா நம்ம வீட்ல இருக்கும்போது வெளியே தான் விட்டீங்க அப்போ ஆகாத என பல்பு கொடுக்கிறார். இது என்ன மொத்தமா பாக்கியா பக்கம் சாஞ்சிட்டா என புலம்புகிறார் கோபி. பிறகு ஈஸ்வரியிடம் என்னமா ராதிகா இப்போலாம் ரொம்ப பாக்கியாவுக்கு சப்போட்டா பேசுறா இவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து என்னை துரத்தினா என்ன பண்றது என கேட்க ஈஸ்வரி அப்படியெல்லாம் நான் விடமாட்டேன், ஒண்ட வந்த ராதிகாவை விரட்டி விட்டுடுவேன் என கூறுகிறார்.

அப்படினா ராதிகா பின்னாடியே நானும் போக வேண்டியது தான் என புலம்புகிறார். அடுத்து செழியன் ஜெனியை பார்க்க போக அவரது திரும்பத் திரும்ப இப்படியே பண்ணிட்டு இருந்தா போலீசுக்கு போன் பண்ண வேண்டியது வரும் என சொல்லி கதவை சாற்றி துரத்தி விடுகிறார். வீட்டுக்கு வந்த செழியன் கோபியிடம் வருத்தப்பட்டு புலம்பி அழ பாக்கியா அதை பார்த்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.