
பாக்கியாவை பழி தீர்க்க துடிக்கிறார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் கோபி வீட்டை விட்டு வெளியே சென்றதும் வீட்டில் உள்ள எல்லோரும் இப்பதான் வீடு வீடா இருக்கு என சந்தோஷப்படுகின்றனர். வீட்டை பாக்கியா யார் மேல எழுதுறது எனக்கு கேட்க எல்லோரும் உன் மேல தான் எழுத போறோம் என்று சொல்ல பாக்கியா ஐயோ வேண்டாம் என அதிர்ச்சி அடைகிறார்.

ஈஸ்வரி இந்த வீடு உன் பேரில் இருக்கிறது தான் நல்லது உனக்காக நீ இதுவரைக்கும் எதுவும் செஞ்சுக்கிட்டது கிடையாது நான் சொன்னா கேட்பியா இல்லையா என பாக்கியாவை சம்மதிக்க வைக்கிறார். மறுபக்கம் கோபி மற்றும் ராதிகா ராதிகாவின் அம்மா கமலாவிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்க அவர் நீங்க அந்த வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது என ஏற்றி விடுகிறார்.
ஆனால் ராதிகா இன்னமும் அங்கே இருக்க முடியாது கொஞ்சம் கூட மரியாதை இருக்காது ஏற்கனவே அவங்க கோபி எங்கிட்ட இருந்து திருச்சி திரும்பவும் பாக்கியா கிட்ட சேர்த்து வைக்கணும் தான் நினைச்சாங்க, அதுக்காக அவங்க என்ன வேணாலும் செய்ய தயாராக இருக்காங்க என்று சொல்கிறார். மேலும் பாக்கியா ரொம்ப ஓவரா பேசுறீங்க என்று ராதிகா சொல்லிக் கொண்டிருக்க அவரது அம்மா இருக்கட்டும் அவங்க எல்லாருக்கும் ஒரு நாள் வச்சிக்கிறேன் என்று சத்தம் போடுகிறார்.

அதனைத் தொடர்ந்து ரூமுக்குள் கோபமாக இருக்கும் கோபியை ராதிகா சமாதானம் செய்யப்போக கோபி என் பிள்ளைகள் அப்பா அம்மாவை என்கிட்ட இருந்து பிரித்து என்னை வெளியே அனுப்பின அந்த பாக்கியாவை சும்மா விடமாட்டேன். அவங்க எல்லாரையும் அவகிட்ட இருந்து பிரித்து யாரும் இல்லாம நடுத்தெருவில் நிக்க வைக்கிறேன் என சபதம் எடுக்கிறார். ராதிகா அது எல்லாம் உங்களால முடியாது என்று சொல்ல என்ன பத்தி உனக்கு முழுசா தெரியல ராதிகா என்னை முழு வில்லன் ஆக மாறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

இன்னொரு பக்கம் ஈஸ்வரி மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்லி அக்கம் பக்கத்தில் காசிக்குப் போக இருப்பதால் நானும் போகப் போகிறேன் என்று சொல்கிறார். எல்லோரும் அவ்வளவு தூரம் வேண்டாம் என சொல்ல ஈஸ்வரி காசிக்கு போவதில் உறுதியாக இருக்க ராமமூர்த்தி உனக்கு அங்க போயிட்டு வந்தா தான் நிம்மதி கிடைக்கும் நான் போயிட்டு வா என சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து பாரில் தன்னுடைய நண்பனுக்காக காத்திருக்கும் கோபி குடிக்க தொடங்கி நண்பன் வந்ததும் வீடு தன் கையை விட்டு போனதும் பாக்யா தன்னை கெட் அவுட் என்று சொல்லி வெளியே துரத்திய கதையையும் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
