பாக்கியா கேட்ட கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார் கோபி.

Baakiyalakshmi Episode Update 12.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் பணத்தால் பிரச்சனைகள் நடப்பதால் நாங்க ஊருக்கு போய் விடுகிறோம் என ஈஸ்வரி பாக்கியாவிடம் கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் என சொன்ன இல்ல நாங்க ஊருக்கு போறது தான் சரியான ஈஸ்வரி சொல்ல உங்கள ஊருக்கு அனுப்பினா எங்களைவிட நன்றி கெட்டவங்க வேற யாரும் இல்ல. இனிமே இத வீட்டில் எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். அவர்கிட்ட எதுவுமே பேச முடியாது அப்படியே ஏதாவது பேசினா அவருக்கு கோபம் வந்து விடும் நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் இருக்கேன். மாமாவுக்கு இப்படி ஆனதுமே எனக்கு ஒரு கை உடைந்த மாதிரி இருக்கு இப்போ நீங்க ஊருக்கு போய்ட்டா நம் மதமா உடைந்து போய் விடுவேன் என்னை விட்டு போய் விடாதீர்கள் என அழுகிறார். எனக்கு கண்கள் நீயே ஈஸ்வரி சரி நாங்க போகல என கூறுகிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் நிற்கும் கோபி, கலங்கிய ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் ராதிகா வீட்டிற்குப் போன கோபி மயூவுக்கு கதை சொல்லி அவரை தூங்கவைத்து ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்கிறார். மணி 12 ஆச்சு இன்னும் அவரை காணவில்லை என பாக்கியா சோபாவிலேயே அமர்ந்து கொண்டு இருக்கிறார். அங்கு வந்த என்னிடம் இதையெல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார் மேலும் பாட்டியும் ஊருக்கு போவதாக சொன்னதை கூறுகிறார். இந்த பிரச்சனயால் அதான் அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க என சொல்ல இனிமே நான் செழியனிடம் சண்டை போட மாட்டேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். உங்கப்பா கோபமா போனாரு எங்க தங்கறாருனு தெரியல, இதெல்லாம் புது பழக்கமா இருக்கு என ஒரு பாக்கியா வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு எழில் அப்பா வருவார் அவர் வந்த நான் கதவை திறக்கிறேன் நீ போய் தூங்கு என அனுப்பி வைக்கிறார். இந்தப் பக்கம் கோபி ராதிகா மயூவிடம் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறார். மயூ வீட்டிற்கு போகாதீங்க இங்கேயே இருங்க உங்க டிரஸ் எல்லாம் கொண்டு வந்துடுங்க என கூறுகிறார். ஒருவழியாக அவரை சமாதானம் செய்து விட்டு வீட்டிற்கு போன கோபி பாக்கியா விடும் ஒரு பிளாக் காபி ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துட்டு 10 நிமிஷம் கழிச்சி மேலே வா என சொல்கிறார்.

பாக்கியா கேட்ட கேள்வி.. பதில் சொல்ல முடியாமல் நிற்கும் கோபி, கலங்கிய ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஒரு நிமிஷம் என கூறிவிட்டு பாக்கியா கோபியிடம் நைட்டு எங்க போனீங்க என கேட்க அவர் அப்படியே திகைத்துப் போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.