வெறுப்பேத்திய அப்பாவை கொல்ல துணிந்து உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கிச்சனில் செழியன் ஜெனிக்கு ஜூசை குடிக்க கொடுத்து ஆசையாக பேசிக் கொண்டிருக்க இதை ஈஸ்வரியும் பாக்யாவும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

வெறுப்பேத்திய ராமமூர்த்தி.. அப்பாவை கொல்ல துணிந்து கோபி, இனியாவால் கோபிக்கு வந்த பிரச்சினை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அடுத்து இது பற்றி ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டு இருக்க அப்போது வர்ஷினி வீட்டுக்கு வந்து ஜெனிக்கு வாழ்த்துக்கள் கூறி கிப்ட் கொடுக்கிறார். மேலும் ஈஸ்வரியை ஆன்ட்டி என சொல்லி அழைத்து ஐஸ் வைக்கிறார். அடுத்ததாக பாக்யாவும் அவரது மாமனாரும் வெளியில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்க அப்போது கோபி ராதிகாவுடன் காரில் வந்து இறங்க அதை பார்த்ததும் ராமமூர்த்தி தாத்தா ஆயிட்டேன், ஈஸ்வரி கொள்ளுப்பாட்டி ஆயிட்டா. அவ பையன் தாத்தாவாகிட்டான், தாத்தா தாத்தா என கிண்டல் அடிக்க கோபி டென்ஷனாகிறார். என்னப்பா பிரச்சனை உங்களுக்கு 25 வருஷத்துக்கு முன்னாடி நான் ஆசைப்பட்ட பொண்ணு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இன்னைக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என சத்தம் போடுகிறார்.

மேலும் என் பையன் அப்பா ஆனதுல எனக்கு சந்தோசம் தான் என சொல்லி அப்பாவிடம் மல்லுக்கட்ட ராதிகா கோபியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். எப்படி நடந்துக்கிறார் பாரு எனக்கு வர கோவத்துல என கோபி மேசை மீது இருக்கும் கத்தி எடுத்துக் கொண்டு வர ராதிகா தடுத்து நிறுத்துகிறார்.

வெறுப்பேத்திய ராமமூர்த்தி.. அப்பாவை கொல்ல துணிந்து கோபி, இனியாவால் கோபிக்கு வந்த பிரச்சினை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அடுத்து ஸ்கூலில் இனியா தன்னுடைய தோழிகளிடம் அப்பா திருமணம் செய்து கொண்டதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். மேலும் அந்த குட்டி பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுக்கு வந்து என் கூட நல்லா விளையாடுவா நிறைய டாய்ஸ் அவளுக்கு கொடுத்து இருக்கேன் ஆனா இப்போ அவ என் அப்பாவை டாடி என்று கூப்பிடறது எனக்கு சுத்தமா பிடிக்கல என கூறுகிறாள். இந்த சமயத்தில் மயூ வந்து இனியாவை அக்கா என கூப்பிட அக்கானு என் பின்னாடி சுத்துன அடிச்சிடுவேன் என திட்டுகிறார். டாடி தான் இப்போ நீங்க இன்னும் க்ளோஸ் அக்காவா ஆயிட்டீங்கன்னு சொன்னாரு என சொல்ல மயூவை பிடித்து தள்ளி விடுகிறாள் இனியா.

ஸ்கூலில் நடந்த விஷயத்தை ராதிகாவிடம் சொல்லி வருத்தப்பட பிறகு கோபி வந்ததும் ராதிகா இதை வைத்து கச்சேரியை ஆரம்பிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.