
அமுதாவின் முதல் கணவன் திரும்பி வந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிடம் பாக்யா எனக்கும் பயமாக தான் இருந்தது ஆனால் அதைவிட உன்னுடைய அசைன்மென்ட் முக்கியம் என தோணுச்சு. இன்னொரு பக்கம் உங்க அப்பா என்னால முடியாதுன்னு சொல்லி என்னை எல்லாவற்றையும் செய்ய வைக்கிறார். ரூமுக்கு போலீஸ் வந்தது நடு ரோட்டில் கார் ரிப்பேராகி நின்றது, ஹோட்டலில் ரூம் கிடைக்காமல் தவித்தது இது எல்லாமே பயத்தை கொடுத்தது. ஆனாலும் எப்படியாவது செய்து முடிக்கணும் என்ற எண்ணம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் அமிர்தாவின் அப்பா அம்மா கணேஷின் பிரிவை நினைத்து அழுதபடி படையல் போட எல்லாவற்றையும் தயார் செய்கின்றனர். பாக்கியா ராமமூர்த்திக்கு போன் செய்து வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க என்று விசாரிக்கிறார். செழியன் வீட்டுக்கு வந்துட்டானா என்று கேட்க அவனை பார்க்கவே முடியலையே ஜெனி வீட்டிலேயே இருக்கான் போல என்று சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக அமிர்தா சக்கரை பொங்கல் வடை பாயசம் செய்திருக்க ராமமூர்த்தி என்ன விஷேசம் என கேட்க எழில் கணேசுக்கு நினைவு நாள் இதுக்கு முன்னாடி உங்க வீட்ல என்ன செய்வீங்களோ அதை இந்த வீட்டிலும் நீ தொடர்ந்து செய், நிறுத்த வேண்டாம் என்று சொன்னேன் என்று சொல்ல ராமமூர்த்தி நீ எதுக்கும் கவலைப்படாதம்மா இப்பதான் நிலாவிற்கு அப்பாவா எழில் இருக்கானே அவன் உங்கள் ரெண்டு பேரையும் நல்லபடியா பார்த்துப்பான் என்று ஆறுதல் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து கணேஷுக்கு படையல் போட்டு அவரது அம்மா அழுது கொண்டிருக்க அப்பா வந்து என்ன பண்றது கடைசி காலத்துல இப்படி அழணும்னு விதி என்று போட்டோவுக்கு மாலை போட்டு படையல் ஏற்பாடு செய்ய யாரோ கதவைத் தட்ட அவரது அம்மா கதவை திறந்து பார்த்து மிரண்டு நிற்கிறார்.

யார் என்று அப்பாவும் வந்து பார்க்க நான் தான் பார்க்க கணேஷ் என்று சொல்ல இருவரும் மகனை உயிரோடு பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுகின்றனர். இவ்வளவு நாளா நீ உயிரோடு இருக்கன்னு எங்களுக்கு தெரியாம போச்சே என்று கண் கலங்கி கணேஷை உள்ளே கூட்டி வர போட்டோவுக்கு மாலை போட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.
நீ உயிரோட இருக்கான்னு தெரியாம உனக்கு படையல் போட்டு எவ்வளவு பெரிய பாவம் பண்ணிட்டோம் என்று அதை எல்லாம் எடுத்து போட்டோவை சுத்தம் செய்கின்றனர். பரவால்ல விடுங்க அம்மா அதான் நான் வந்துட்டேன்னு இனிமே நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே அழக்கூடாது என்று சொல்லும் கணேஷ் அமிர்தா எங்கே என்று கேட்க இருவரும் பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சி அடைகின்றனர்.
அமிர்தா உள்ள இருக்காளா? என்று அமிர்தா அமிர்தா என கூப்பிட்டுக் கொண்டு ரூமுக்குள் கணேஷ் வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
