ஜெனிக்கு நடந்த பங்க்ஷனில் கோபி ராதிகாவுடன் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனிக்கு ஐந்தாவது மாத பூ முடிக்கும் பங்க்ஷன் நடத்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது.

ஜெனிக்கு நடந்த பங்க்ஷன்.. கோபி கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அப்போது ஜெனியின் அம்மா தன்னுடைய உறவினர்களுடன் வர ஜெனி பாட்டியிடம் பங்ச்சனை தொடங்கலாமா என கேட்க அப்போது ஜெனியின் அம்மா பங்க்ஷன் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல சின்ன பிரேயர் தான் பாதர் வந்துகிட்டு இருக்காரு என சொல்கிறார். பிறகு பாதர் வந்து பிரேயர் செய்துவிட்டு கிளம்பி சென்று விடுகிறார்.

இனியா ராதிகா வீட்டில் இருந்து ஃபங்ஷனுக்கு கிளம்பி கோபியிடம் பங்ஷனுக்கு போவதாக சொல்ல கோபி ராதிகாவை அழைத்து பங்ஷனுக்கு போகலாம் வா என கூப்பிட ராதிகா நான் வரவில்லை என சொல்ல கோபி வற்புறுத்தி ராதிகாவை சம்மதிக்க வைக்கிறார்.

ஜெனிக்கு நடந்த பங்க்ஷன்.. கோபி கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்தப் பக்கம் ஜெனிக்கு நலங்கு வைத்து வளையல் போடும் வேலைகள் நடந்து முடிந்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி ராதிகாவுடன் என்ட்ரி கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஜெனியின் உறவினர் ஒருவர் மாப்பிள்ளை கூட்டிட்டு வந்து நிற்கிறார் என கேட்க கோபி இது ராதிகா என்னுடைய மனைவியான சொல்ல என்ன மனைவின்னு சொல்றாரு என அதிர்ச்சியாகி கேள்வி கேட்கின்றனர்.

ஜெனிக்கு நடந்த பங்க்ஷன்.. கோபி கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ராமமூர்த்தி கோபப்பட்டு கோபியை அடிக்க போக ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி வேண்டாம் ஜெனியோட சொந்தக்காரங்க இருக்காங்க என கூறுகிறார். பிறகு செழியன் ஜெனிக்கு கோபி வாழ்த்து சொல்லிவிட்டு பங்க்ஷன் நல்ல புரிய முடிந்ததா என கேட்க அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு நீங்க வாங்க என சொல்லி ஜெனியை அழைத்து வந்து நலங்கு வைக்க சேரில் உட்கார வைக்கிறான்.

அடுத்து கோபி ராதிகாவை நலங்கு வைக்க அழைக்க அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.