வெட்கமாக இல்லையா என கோபியை வெளுத்து வாங்கியுள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி அம்மா அவரிடம் கோபி வந்து பாக்கியா மற்றும் உன்னை பற்றி தப்பு தப்பா சொல்லிட்டு போனதாக சொல்ல பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார்.
முதல்ல என்கிட்ட பேசினாரு அப்புறம் பாக்கியா மேடம் கிட்ட பேசினாரு, இப்போ உங்ககிட்டயா அதெல்லாம் பெருசா எடுக்காதீங்க என்று சொல்ல அவருடைய அம்மா உனக்கு பாக்யாவை ரொம்ப பிடிக்கும் தானே பேசாம அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடவா என்று கேட்க என்னம்மா நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க, எனக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இல்ல, மேடம் மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் இருக்காது என்று சொல்கிறார்.
அடுத்ததாக பாக்யா காலேஜ் போக தேவையில்லை பொருட்களை வாங்குவதற்காக கிளம்ப எழில் கூட்டி போக தயாராகிறார். இனியவையும் கூட்டிட்டு போலாம் இரண்டு பேரும் ஒரே மாதிரி பேக் வாங்கிட்டு காலேஜ் போனா நல்லா இருக்கும் என்று சொல்லி இனியாவை கூப்பிட இனியா நான் வரல நீ என்கூட காலேஜ் வருவது சரியா தப்பா நீ எனக்கு தெரியல என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
பாக்கியா திரும்பத் திரும்ப கூப்பிட நான் டாடியோட போயிட்டு வாங்கிக்க போறேன் அவருக்கு என்ன கூட்டிட்டு போறதா சொல்லி இருக்காரு என்று சொல்லி ஷாக் கொடுக்க பிறகு இனியாவை திட்டி விட்டு பாக்கியாவை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் கோபி வாய் தவறி அந்த இடியட் தேடி அலைகிறேன் என்று உளறி விட பாக்யா வீட்ல அசிங்கப்பட்டது ரோட்ல அசிங்கப்பட்டது போதாது இப்போ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வேற போய் அசிங்கப்பட்டு வந்துட்டீங்களா என்று திட்டுகிறார். அவங்கதான் நீங்க வேண்டானு தூக்கி போட்டுட்டாங்கல, நீங்களும் அதே மாதிரி இருக்க வேண்டியது தானே என்று திட்டுகிறார்.
கோபி அந்த இடியட் பண்ற வேலையால குடும்பத்துக்கு அசிங்கமா போயிடும் அவங்க ரெண்டு பேரையும் எப்படியாவது பிரிக்கணும் ராதிகா எனக்கு வரும் உங்கள் அப்படியே என்கிட்ட அவருடைய அம்மா கூப்பிட கோபி கூப்பிடுறாங்க பாரு போ என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டேன் பாக்கியா உன்னை சும்மா விடமாட்டேன் என்று சவால் விடுகிறார்.
அடுத்ததாக காலேஜ் செல்வதற்காக பொருட்களை வாங்கி வந்து பாக்கியா மற்றும் இனியா இருவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு யாருடைய டேஸ்ட் நல்லா இருக்குனு எடுத்துக்காட்டி ஜாலியாக சண்டை போடுகின்றனர்.
மறுநாள் காலையில் இனியா காலேஜ் கிளம்ப எல்லோரும் அறிவுரை கூறி அனுப்பி வைக்க எழில் பைக்கில் கூட்டிக் கொண்டு கிளம்புவதற்காக வெளியே வந்து கதவை திறக்கும் போது கேட்டுக்கு வெளியே கோபி காருடன் நின்று கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து எல்லோரும் ஷாக்காகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.