அமிர்தா வீட்டுக்கு போன எழிலுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Baakiyalakshmi Episode Update 04.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டில் தன்னுடைய பிசினஸ் நஷ்டத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறிய கோபி அதனை இழுத்து மூடிவிட்டு வேறு ஒரு கம்பெனியில் வேலைக்குச் செல்லப் போவதாக கூறினார். யாராச்சு சொந்த பிசினசை விட்டுட்டு வேறு கம்பனிக்கு வேலைக்கு போவாங்கலா? பணம் ஏதாச்சு வேணுமா நான் எதாச்சி அரேஞ்ச் பண்ண வா என கேட்கிறார். அதுலாம் ஒன்னும் வேண்டாம் ராதிகா நான் பார்த்துக்கிறேன். எல்லாத்துக்கும் ஒரு சொலியூசன் இருக்கும் என ராதிகா கூறியதை கேட்டு உற்சாகமான கோபி இதுதான் ராதிகா எல்லாத்தையும் பாசிட்டிவ்வா சொல்ற உன்கிட்ட பிடிச்சதே அதுதான் என சொல்கிறார்.

இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)

அமிர்தா வீட்டுக்கு போன எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கோபியை வச்சு செய்த அவருடைய அப்பா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் எழில் அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். மிகுந்த யோசனையுடன் வீட்டிற்கு செல்லும் எழில் அமிர்தாவின் அப்பா அம்மாவோடு வைத்துவிட்டு எழில் பாப்பாவை தூக்கி கொஞ்சுகிறார். குழந்தையுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். அமிர்தாவின் அப்பா நிலா பாப்பாவை அழகாக போட்டோ எடுத்து கொடு பிரேம் போட்டு வீட்டில் மாட்ட வேண்டும் என கூறுகிறார். ‌‌ உடனே எழில் சாயங்காலமே கேமரா எடுத்துட்டு வரேன் பெருசா பிரேம் போட்டு மாட்டி விடலாம் என சொல்கிறார்.

இந்த நேரத்தில் அமிர்தா உள்ளேயே இருந்து வந்து குழந்தையை பிடுங்கிக் கொள்கிறார். அவருடைய அம்மா என்னாச்சு என கேட்க அவளுக்கு பசிக்கும் சாப்பாடு கொடுத்து ரொம்ப நேரம் ஆச்சு என சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார். எல்லாமே நடிப்பு. என் கிட்ட பேசுறதுக்காக அப்பா அம்மாகிட்ட பேசுறாரு, அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும். ஹாஸ்பிடல்ல என்கிட்ட அப்படி பேசிட்டு எதுவுமே நடக்காதது போல இருக்காரு என ரூமுக்குள் பேசுகிறார்.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya

அதன் பிறகு வீட்டில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது பாக்கியா கோபியிடம் சமைக்கிறதுக்கு வேறு இடம் பார்க்க சொன்னீங்க இல்ல வேற இடம் பார்த்தேன் என கூறுகிறார். முதலில் வெரிகுட் என சொன்ன கோபி பிறகு பாக்கியா அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் என சொன்னதும் என்கிட்ட எதுவும் கேட்காமல் கொள்ளாமல் எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசியாக வந்து சொல்றியா என கோபப்படுகிறார். உடனே கோபியின் அப்பா இப்ப அதுக்கு என்ன? நீ எல்லாத்தையும் சொல்லிட்டு தான் செய்யரியா? நான்தான் பாக்யாவுக்கு இடம் பார்த்தேன் நான் தான் அட்வான்ஸ் கொடுத்தேன். பாக்யா நீ எதுக்கும் கவலைப்படாத என கூறுகிறார். எழிலும் அதையே சொல்கிறார். உடனே கோபி உனக்கு புடிச்சிருந்தா ஓகே என பிளேட்டை மாற்றிவிடுகிறார்.

அமிர்தா வீட்டுக்கு போன எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கோபியை வச்சு செய்த அவருடைய அப்பா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எழில் நாம பெருசா விளம்பரம் பண்ணலாம் என சொல்ல கோபி கோபி அம்மா மற்றும் இனியா ஆகியோர் கிண்டலடித்து சிரிக்கின்றனர். பிறகு கோபி என்னால முடியல என ரூமிற்கு சென்று விடுகிறார். எங்களையெல்லாம் விடுமா நாம விளம்பரம் பன்றோம் என எழில் சொல்ல ஆமாம் ஆன்ட்டி இது நல்ல ஐடியா என ஜெனியும் கூறுகிறார்.

பிறகு இரவு ரூமுக்குள் பாக்கியா தன்னுடைய வளர்ச்சி பற்றி இனியாவிடம் பேசி மகிழ்ச்சி கொள்கிறார். இதில் என்ன வச்சி விளம்பரம் பண்ணப் போறதா சொன்னான் என சொல்லி உற்சாகம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya | Saravana Stores Elite Diamond 💎