நிச்சயதார்த்த மேடையில் அசிங்கப்பட்டுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் மண்டபத்துக்கு வர செழியன் அவர்களை வரவேற்று வர்ஷினியின் அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதன் பிறகு பாக்கியா எழிலின் ரூமுக்கு சென்று அவனிடம் பேச முயற்சி செய்ய அங்கு செழியன் இருக்க உடனே பாக்யா அவனிடம் பாட்டி உன்னை கூப்பிட்டதாக சொல்லி அனுப்பி விட்டு எழிலிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என கேட்க நான் நல்லாதான் இருக்கேன், என்னை யார் கட்டாயப்படுத்தி இப்படி பண்ண முடியும் என பேசிக்கொண்டு இருக்க உன் முகமே சரியில்லை, உண்மையை சொல்லு என பாக்கியா கேட்க அப்போது ஈஸ்வரி உள்ளே வந்து நெனச்சேன் நீ இப்படியெல்லாம் அவன்கிட்ட ஏதாவது பேசி குழம்புவனு நெனச்சேன் என திட்டி வெளியே கூட்டி செல்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரியிடம் பாக்கியா அவனுக்கு எதுக்கு இவ்வளவு அவசர அவசரமா கல்யாணம் என கேட்க ஈஸ்வரி இல்லன்னா அவன் அந்த அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்பான் உனக்கு பரவாயில்லையா என கேட்கிறார்? நீ எதுவும் பேசக்கூடாது அவனுக்கு அம்மாவா மேடம் நின்னா மட்டும் போதும் என சொல்கிறார்.

இந்த பக்கம் எழில் வீட்டுக்கு வரும் அமிர்தா உள்ளே சென்று கதவைத் தட்டி பெல் அடித்து பார்க்க யாரும் இல்லாத காரணத்தினால் வெளியே வந்து அந்த பக்கம் வந்த பெண்மணியிடம் விசாரிக்க எல்லாரும் நிச்சயதார்த்தத்துக்கு போய் இருக்காங்க என சொல்கிறார். ஆனால் அது எழிலுக்கான நிச்சயதார்த்தம் என அமிர்தாவுக்கு தெரியாமல் இருக்கிறது. பிறகு அமிர்தா எல்லோரும் எந்த இடத்துக்கு போயிருக்காங்க என விசாரித்து வடபழனி முருகன் கோவில் பக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் நிச்சயதார்த்தத்துக்கு எல்லாம் ஏற்பாடுகளும் நடந்து முடிந்து பிள்ளையோட அப்பா அம்மா மேல வாங்க என ஐயர் கூப்பிட அப்போது எல்லோரும் பாக்யாவை மேல வர சொல்ல கோபி ராதிகாவை மேலே வருமாறு கூப்பிடுகிறார். வர்ஷியின் அப்பாவும் அவங்க ரெண்டு பேரும் வந்தா ஜோடியா நிப்பாங்க என கோபிக்கு ஆதரவாக பேசுவது போல பதில் சொல்ல எழில் பாக்கியா தான் எங்க அம்மா என சொல்கிறார். ஏன் நீங்க தனியா நிக்கலையா என சொல்ல வர்ஷினி அப்பா நீங்க எதுவும் பேசாதீங்க என சொல்கிறார்.

பிறகு மீண்டும் பாக்கியாவை கூப்பிட கோபியும் ராதிகாவும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.