பாக்கியா கார் ஓட்டி கலக்க மறுபக்கம் கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மயூவை அழைத்துக் கொண்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக ஷேரில் உட்கார வைக்க கோபி மயூவை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

பிறகு ஒவ்வொருத்தராக மயூவுக்கு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்ய மயூ நான் பாக்கும்போது குட்டி பொண்ணா இருந்தா இப்போ எவ்வளவு வளர்ந்துட்டா என ஆனந்த கண்ணீர் விடுகிறார் கோபி. பிறகு ராமமூர்த்தி வர அவரும் மயூவை ஆசிர்வாதம் செய்துவிட்டு கிளம்ப கோபி மயூவை கூட்டிச்சென்று ஜூஸ் கொடுக்க அதை பார்த்தவர்கள் ராதிகா கொடுத்து வச்சவ ரெண்டாவது புருஷன் அவளையும் மயூவையும் நல்லபடியா பாத்துக்குறார் என பாராட்ட ராதிகா சந்தோஷப்படுகிறார்.

பிறகு கோபி இனியாவுக்கு போன் செய்து எங்க போயிட்டு இருக்கீங்க எல்லாம் ஓகேவா டிரைவர் நல்லபடியா ஓட்டுறாரா என்று கேட்க இனியா அம்மா தான் ஓட்டுறாங்க டிரைவர் பாதியிலேயே போயிட்டாரு என்று விஷயத்தை சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். கார உடனடியா ஓரங்கட்டுங்க என்று சொல்ல ஈஸ்வரியும் ஓரம் நிறுத்த சொல்ல வேறு வழி இல்லாமல் பாக்கியாவும் நிறுத்துகிறார்.

பிறகு கோபி பாக்யாவை புடிச்சு சத்தம் போட பாக்கியா போனை கட் பண்ணி விட்டு திரும்பவும் கார் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். எல்லோரும் ஒரு ஹோட்டலுக்கு வர ஈஸ்வரி இங்கே எல்லாம் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல சமாதானப்படுத்தி சாப்பிட அழைத்துச் செல்கின்றனர்.

வீட்டில் அமிர்தா சமையல் செய்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் எழில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.