Baakiyalakshmi Episode Update 02.08.23
Baakiyalakshmi Episode Update 02.08.23

பாக்கியாவிடம் ப்ரப்போஸ் செய்துள்ளார் பழனிச்சாமி.

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா நாளையிலிருந்து எல்லாருக்கும் இந்த பாக்யா காபி போட்டு தருவா என்று எதிர்பாக்காதீங்க என வீட்டில் சொல்ல எல்லோரும் ஏன் என்று கேட்க காலேஜ் போகப் போகும் விஷயத்தை பற்றி சந்தோஷமாக சொல்கிறார்.

நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க சமையல நான் பாத்துக்குறேன் என்று அமிர்தா சொல்ல ஜெனி கூடவே நானும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். உடனே பாக்கியா அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம், உனக்கு தான் சமைக்கவே வராதே என நக்கல் அடிக்கிறார்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் செல்வி வந்து என்னக்கா உன் சத்தம் தெருமுனை வரைக்கும் கேட்கிறது அவ்வளவு சந்தோஷமா இருக்க என்ன விஷயம் என கேட்க காலேஜ் போகப் போவதாக சொல்ல செல்வி நம்ப மறுக்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் ஆமாம் உண்மைதான் என சொல்லியும் செல்வி சும்மா காமெடி பண்ணாதீங்க என சொல்லிக் கொண்டிருக்க எழில் உங்க மேல சத்தியமா அம்மா காலேஜ் போறாங்க என்று சொல்ல நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்ட நல்லா படிச்சு என் பேரு காப்பாத்துக்கா என்று பாக்யாவை கலாய்க்கிறார்.

அதன் பிறகு பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வர அங்கு பழனிச்சாமியிடம் காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல அவர் பாராட்டி வாழ்த்து கூறுகிறார். பிரேக் டைமில் எல்லோரும் அப்படியே உட்கார சொல்லி பேக்கரிக்கு சென்று கேக் வாங்கி வந்து பாக்கியா காலேஜ் போகும் விஷயத்தை எல்லோருக்கும் சொல்லிக் கட் செய்து கொண்டாடுகிறார். இதனால் பாக்கியா பூரிப்பு அடைகிறார்.

அப்படியே மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பன் சதீஷை சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் கோபி பாக்யா காலேஜ் போகப் போகும் விஷயத்தை சொல்லி இந்த வயசுல இதெல்லாம் தேவையா என திட்டுகிறார். அந்த பாக்கியாவை நேருக்கு நேரா சந்திச்சு நாக்கு புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும் என்று இனியாவுக்கு போன் செய்து பாக்கியா எங்கே இருக்கிறார்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொள்கிறார்.

பிறகு தன்னுடைய நண்பனை கூட்டிக்கொண்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கிளம்புகிறார். இங்கே கிளாஸில் ஒருவர் நான் ஒரு பொண்ணை லவ் பண்ற, இங்கிலீஷ்ல எப்படி ப்ரபோஸ் பண்ணனும் சொல்லி தாங்க என்று கேட்க அதெல்லாம் சொல்லித் தர முடியாது, வேணும்னா ப்ரொபோசல் கிளாஸ் வெச்சுக்கலாம் என்று சொல்லி ஏற்பாடு செய்கின்றனர்.

பழனிச்சாமி லோபிதாவிடம் ப்ரபோஸ் செய்வது போல பேச முயற்சி செய்ய இருவருக்கும் சிரிப்பு வந்துவிட லோபிதா நான் வரல என்று வந்து உட்கார்ந்து விட பிறகு பாக்கியாவை எழுப்பி அனுப்பி விடுகின்றனர். பழனிச்சாமி பாக்யாவிடம் ஐ லவ் யூ என ப்ரபோஸ் செய்ய அந்த நேரம் பார்த்து கோபி அங்கு வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.