அப்பாவை அசிங்கப்படுத்தி வசனம் பேசிய கோபியை ஒரே வார்த்தையில் ஆப் பண்ணி உள்ளார் பாக்யா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த கல்யாணத்தை நான் நடத்த விட மாட்டேன் என கோபியின் அப்பா சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கடுப்பான கோபி ஒரு கட்டத்தில் அவரை பிடித்து தள்ளுகிறார். ரெண்டு பேரும் வெளியே போங்க அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை அப்பான்னு கூட பார்க்க மாட்டேன் என சொல்ல அவர் அப்படியே உடைந்து போய் நிற்கிறார்.

அப்பாவை அசிங்கப்படுத்தி வசனம் பேசிய கோபி.. ஒரே வார்த்தையில் அதிர்ச்சி கொடுத்த பாக்கியா - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாக்யா நீங்க வாங்க மாமா என அவரை வெளியே அழைத்து வர கோபி பாக்கியலட்சுமி ஒரு நிமிஷம் வாழ்க்கை ஒரு வட்டம் இப்ப புரியுதா அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினீங்க இன்னைக்கு நீங்க அசிங்கப்பட்டு வெளியே போறீங்க என ஏளனமாக பேச திரும்பி வந்த பாக்கியா இன்னைக்கு உங்க அப்பாவுக்கு கொடுத்த மரியாதையை நாளைக்கு உங்க புள்ளைங்க உங்களுக்கு கொடுக்க கூடாதுன்னு அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கங்க என ஒரே டயலாக்கில் கோபியை அடக்குகிறார்.

பிறகு பாக்கியா மாமாவை மேலே அழைத்து வந்து உட்கார வைத்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அவன கொலை பண்ணியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துவேன் என சொல்ல எங்களுக்கு நீங்க வேண்டும் மாமா, இழந்த உறவு போதும், இன்னொரு உறவை இழக்க நாங்கள் தயாராக இல்லை. தயவு செஞ்சு நீங்க வீட்டுக்கு போங்க என பாக்கியா கெஞ்சுகிறார்.

பிறகு ராஜசேகர் வந்து பாக்யாவை சந்தித்து என்னம்மா பிரச்சனை என கேட்க பிரச்சனை எதுவும் இல்லை என சொல்ல மேனேஜர் நடந்த விஷயங்களை கூறுகிறார். பாக்கியா சாப்பாட்டுல நாங்க எந்த குறையும் வைக்கல. இப்படி பர்சனல் பிரச்சனை வரும்னு எதிர்பார்க்கல, இனி இப்படி நடக்காது ஆர்டர் மட்டும் கேன்சல் பண்ணிடாதீங்க எங்களுக்கு நஷ்டமா போயிடும் என கெஞ்சி அழுகிறார். சரி உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர இனி இப்படி பிரச்சனை வரக்கூடாது என ராஜசேகர் சொல்ல பாக்கியா நல்லபடியா ஆர்டரை முடித்துக் கொடுக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார்.

அப்பாவை அசிங்கப்படுத்தி வசனம் பேசிய கோபி.. ஒரே வார்த்தையில் அதிர்ச்சி கொடுத்த பாக்கியா - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு தனது மாமனாரிடம் தனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த மனுஷனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். எதுக்காகவும் நான் வேலையை விட தயாராக இல்லை என பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.