
கோபியை விட்டைவிட்டு போக சொன்ன பாக்கியா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியை வீட்டை விட்டு பாக்யா போக சொல்ல ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவை நிற்க வைத்து அங்க எதுக்கு அப்படி பேசின என்று கேட்க பிடிக்காத விஷயத்தை பற்றி திரும்பத் திரும்ப பேசன நான் அப்படி தான் பேசுவேன் என்று கோபப்படுகிறார். உடனே கோபி ஈஸ்வரியை அமைதியாக இருக்க சொல்லியும் அவர் இருக்காதால் பாக்யா என்ன பத்தி ஒரு விஷயம் முடிவெடுக்கும் போது என்ன கேட்காமல் நீங்க பேசி இருக்க கூடாது என்று சொல்ல,கோபி பாக்கியாவிடம் அம்மா பேசியது தப்புதான் இனிமே இத பத்தி உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டாங்க பேசினதுக்கு மன்னிப்பு கேட்கிறார். ஈஸ்வரி நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிற என்று சொல்ல நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்கம்மா என்று சொல்லி இதுக்கு மேல இந்த விஷயத்தை பற்றி இந்த வீட்ல யாரும் பேச மாட்டாங்க என்று சொல்ல பாக்யா சென்று விடுகிறார். ஈஸ்வரி நீ என்ன சொன்ன இதுக்கு அப்புறம் யாரும் இதை பத்தி பேச மாட்டாங்களா ரெண்டு பேரும் தனித்தனியா வாழ முடிவு பண்ணிட்டீங்களா அவளோட நல்லதுக்கு தான் நான் போய் பேசுறேன் அது அவளுக்கு புரிய மாட்டேங்குது என்று சொல்ல யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கோபி ஆரம்பிக்க கட்டாயப்படுத்தல அவளுக்கு புரியத்தான் வைக்கிறேன் என்று சொல்ல வேணாமா விட்டுடுங்க என்று கோபி சொல்லுகிறார் எப்படியோ போங்க என்று ஈஸ்வரி சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் டைனிங் டேபிளில் இனியா உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து வந்த கோபி பாக்கியாவிடம் அந்த மாதிரி அம்மா நடந்திருக்கக்கூடாது ஆனா உன் கிட்ட இருந்து வந்த பதில் நான் எதிர்பார்க்கல பாக்கியா என்று சொல்ல நான் வேற என்ன சொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்க என்று சொல்லுகிறார்.அது எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல இருந்தாலும் சாரி என்று சொல்லிவிடுகிறார். அப்போது ஈஸ்வரி வந்து இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டு நிற்கிறார். சாரி சொல்லிவிட்டு கோபி கிளம்பப் போக பாக்யா அவரை நிறுத்தி உங்களுக்கு இப்ப ஹெல்த் எப்படி இருக்கு என்று கேட்க மச் பெட்டர் என்று சொல்லுகிறார் அப்ப நான் இந்த வீட்டை விட்டு நீங்க எப்ப போகப் போறீங்க கொஞ்சம் கேட்கிறார். ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் அதிர்ச்சியாக ஈஸ்வரி பாக்யா என கோபப்படுகிறார். நானே பேசிக்கிறேன் அம்மா என்று சொல்லி அதுதான் ரெண்டுக்கு இருந்தேனே பாக்யா என்று சொல்ல எனக்கு இப்போ அதுல விருப்பம் இல்ல நீங்க இங்க இருந்து போற வரைக்கும் இது மாதிரியான பேச்சு வந்துகிட்டே தான் இருக்கும் நீங்க மன்னிப்பு கேட்டுக்கிட்டே தான் இருக்கணும் அதுக்கு ஒரு முடிவு கட்டணும்னா நீங்க வீட்டை விட்டு போய் தான் ஆகணும் என்று சொல்ல கோப்பி எனக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம் கொடு கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு அது முடிச்சுட்டு நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
பாக்கியா கிச்சனில் வேலை பார்க்க ஈஸ்வரி பாக்யாவை முறைத்துக் கொண்டு அப்படியே இருக்க இனியாவும் அதிர்ச்சியாக நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து செல்வி வர, என்ன ஆளுக்கு ஒரு திசையில் நின்னுகிட்டு இருக்கீங்க என்று ஆரம்பிக்க ஈஸ்வரி கையை காட்டி அமைதியாக இருக்க சொல்லுகிறார். உனக்கு திமிர அதிகமாயிடுச்சு பாக்கியா, பண சம்பாதிக்கிறதுனால அகங்காரம் ஆயிடுச்சு இந்த வீட்ல என்னைக்கு எல்லாம் முடிவு நீ தான் எடுக்கணும்னு ஆரம்பிச்சியோ அன்னைலிருந்து தப்பான முடிவு தான் எடுத்துட்டு இருக்க கோபி இந்த வீட்ல இருந்து போனான்னா நானும் போயிடுவேன் என்று சொல்ல அதுதான் உங்க முடிவு நான் குறுக்க நிக்க மாட்டேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். பிறகு இனியா எதுக்கு பாட்டி அம்மா கிட்ட சும்மா கோபப்படுறீங்க என்று கேட்க அதற்கு ஈஸ்வரி அப்போ உங்க அப்பா வெளிய போனா உனக்கு சந்தோஷமா என்று கேட்க அதுதான் அம்மாவோட விருப்பம் அதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல டேடி வெளியே போனாலும் நான் போய் பார்க்கலாம் என்று சொன்னார்கள் அல்ல அப்படி பாத்துக்கிட்டா போது இவ்வளவு நாள் அப்படித்தானே இருந்தோம் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி சென்று விடுகிறார். செல்வி பாக்யாவிடம் என்னகா உன் மாமியார் என்ன பேசினாலும் தயங்கி கிட்டு நின்னுகிட்டு இருந்த இப்போ திடீர்னு வெளியே போனு சொல்லிட்டேன் என்று சொல்ல எவ்வளவு நாள் பொறுமையா இருக்க முடியும் இனிமே யாரோட விருப்பத்துக்கு நான் தடையாய் இருக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
மறுபக்கம் கோபி செழியனை ரெஸ்டாரண்டுக்கு வர சொல்ல,அவர்கள் என்ன பேசுகிறார்கள்?கோபி செழியனிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு செழியன் பதில் என்ன? பாக்யா ஈஸ்வரி இடம் என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
