ராதிகாவிற்கு ஆதரவாக நிற்கும் பாக்யா, நன்றி சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்கியாவிற்கு நன்றி சொல்லியுள்ளார் கோபி.
![baakiyalakshimi serial today episode update 10-12-2024](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/baakiyalakshimi-serial-today-episode-update-10-12-2024-2.jpeg)
baakiyalakshimi serial today episode update 10-12-2024
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி செழியன் இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கோபி நான் நிறைய தப்பு பண்ணிட்டமா அதுக்கு காரணம் நான் இந்த வீட்டில் இருந்து வெளியே போனது உங்களையெல்லாம் விட்டுட்டு போனது அப்பாவோட சடங்கு பண்ணாதது எல்லாம் என் தலை மேல ஒரு பாரமா இருந்துச்சு அதனால தான் நான் முட்டாள்தனமா ஒரு கேவலமான விஷயத்தை பாக்கியாவுக்காக பண்ணிட்டேன் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். உடனே எல்லோரும் சோகமாக மாற, கோபி நீங்க சந்தோசமா இருந்தீங்க நான்தான் சந்தோஷத்தை கெடுத்துட்டேன் நான் போய் உள்ள ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.
பிறகு அனைவரும் தூங்க போக மறுநாள் காலையில் கோபி எழுந்து வர ஹாலில் யாரும் இல்லாததை பார்த்து வெளியில் நியூஸ் பேப்பரை பார்க்கிறார் அதை எடுக்கப் போக எதிரில் பாக்யா வந்து அதை எடுத்துக்கொண்டு வந்து டேபிளில் வைத்து விடுகிறார். உடனே ஈஸ்வரி வர அவருக்கு காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க எனக்கு மட்டும் தான் போட்டியா என்று பாக்யாவிடம் கேட்க எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறார். கோபி பரவால்ல விடுங்கம்மா என்று சொல்ல அப்ப நான் போட்டா குடிக்க மாட்டியா நான் போய் போட்டோ எடுத்துட்டு வரேன் என்று சொல்லி ஈஸ்வரி கிச்சனுக்கு வர பாக்யா உங்களுக்கு டிபனுக்கு என்ன வேணும் என்று கேட்கிறார். பிறகு நான் சொன்னது எதுவுமே உனக்கு காதல விழலல என்று சொல்ல, உனக்கு திமிரு அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். என்னென்னமோ இருக்கு அதான் கூட இந்த திமிரு சேர்ந்து கிட்ட போகட்டும் என்று பாக்யா சொல்லி விடுகிறார்.
கிச்சனில் பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா வந்து உட்காருவதை பார்த்து இனியாவிற்கு காபி கொடுத்துவிட்டு இன்னும் நீ அசைன்மென்ட் பண்ணாம இருக்க எப்ப பண்ண போற என்று கேட்க பண்ணிடறமா என்று சொல்லுகிறார். பிறகு நோட்புக் வாங்கணும்னு சொன்னேன்ல சாய்ந்திரம் போய் வாங்கிடலாம் என்று சொல்ல சரிமா என்று சொல்லுகிறார். உடனே செல்வி வர இன்னைக்கு வளைகாப்பு ஆர்டர் இருக்கு அக்கா அத பத்தி சொல்லிட்டீங்களா என்று சொல்ல காலையிலேயே போன் பண்ணி சொல்லிட்டேன் போய் பேசிட்டு வந்துடலாம் என்று சொல்லி வெளியே கிளம்ப இனியாவிடம் ஜெனிக்கு பிளாஸ்க்ல காபி இருக்கு கொடுத்துடுவியா என்று சொல்லிவிட்டு, ஈஸ்வரிஇடம் வாக்கிங் போயிட்டு வரேன் அத்தை என்று கிளம்புகிறார்.
உடனே கோபி இனியாவிடம் உனக்கு இன்னைக்கு காலேஜ் இருக்குல்ல இனியா பிரேக்ஃபாஸ்ட் யார் பண்ணுவாங்க என்று கேட்கிறார் இதுல என்ன டாடி டவுட் அம்மா தான் பண்ணுவாங்க என்று சொல்லுகிறார். இப்ப வாக்கிங் போயிட்டு வந்து எப்ப பண்றது என்று கேட்க,ஈஸ்வரி அவை எப்ப எழுந்திப்பா எப்ப தூங்குவான்னு தெரியாது காலைல வாக்கிங் போறதுக்கு முன் இனியாக்கு லஞ்ச் ,டிபன் செழியன்க்கு சாப்பாடு எனக்கு மதியத்துக்கு லஞ்ச் எல்லாமே ரெடி பண்ணிடுவா அதுவும் இல்லாம ஜெனிக்கு ஏதாவது ஹெல்த்தி ஃபுட் ஒன்று ரெடி பண்ணிடுவா என்று சொல்ல கோபி பாக்கியா எப்ப தூங்குவா என்று கேட்கிறார். இந்த வீட்ல எனக்கு தெரியாத விஷயம் அது மட்டும் தான் என்று ஈஸ்வரி சொல்லுகிறார். அவள் ஒரு அதிசய பிறவி என்று சொல்கிறார் ஈஸ்வரி.
பிறகு ஜெனி உட்கார்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி நீ நல்லா சாப்பிடுறியா இல்லையா மெலிந்த மாதிரி இருக்க என்று சொல்ல நான் சாப்பிட்டு மட்டும் தான் இருக்கேன் பாட்டி என்று சொல்லுகிறார். இப்போ நீ ரெண்டு உசுரு நல்லா சாப்பிடு என்று சொல்லிக் கொண்டிருக்க ராதிகா வந்து நிற்கிறார். நீ இப்ப இங்க எதுக்கு வந்த என்று ஈஸ்வரி சண்டை போட பாக்யா அவர்களுக்கு உரிமை இருக்கு வந்து பாக்குறதுக்கு நீங்க எதுவும் சொல்லாதீங்க என்று சொல்லிவிட்டு ராதிகா விடம் நீங்க போய் பாத்துட்டு வாங்க என்று சொல்ல ஈஸ்வரி கையைப் பிடித்துக் கொள்கிறார் பாக்யா என்னை எதுக்கு பிடிச்சிக்கிட்டு இருக்க விடி என்றும் சொல்ல நீங்க ராதிகா கிட்ட எதுவும் சண்டை போட மாட்டேன் சொல்லுங்க நான் விடுகிறேன் என்று சொல்லுகிறார்.
ராதிகா போய் கோபியை பார்க்க அவர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் கோபி கோபி என எழுப்பியும் எழுந்திருக்காததால் ராதிகா வந்து விடுகிறார். பாக்கியா பாத்துட்டீங்களா என்று கேட்க இல்ல தூங்கிட்டு இருக்காரு என்று சொல்லிவிட்டு நீங்க எப்ப வேணா வந்து பாருங்க என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி சோபாவில் தூங்கிக் கொண்டிருக்க கோபி மாத்திரை போட தண்ணி கேட்கிறார் அம்மா அம்மா என்று கூப்பிட ஈஸ்வரி எந்திரிக்காமல் இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் ஈஸ்வரி முழிப்பு வந்து எழுந்து பார்க்க கிச்சனில் பாக்கியா இருக்கிறார். வேண்டுமென்றே மீண்டும் தூங்குவது போல் நடிக்கிறார்.
பாக்கியா கோபிக்கு தண்ணி கொடுக்கிறாரா? கோபி என்ன பேசுகிறார்? அதற்கு பாக்கியா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
![baakiyalakshimi serial today episode update 10-12-2024](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/baakiyalakshimi-serial-today-episode-update-10-12-2024-3.jpeg)
baakiyalakshimi serial today episode update 10-12-2024