பாக்யாவிற்கு கிடைத்த ஆர்டர், கோபி செய்த சதி வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்க கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் அமைதியாக ஈஸ்வரியின் எதிரில் வந்து நிற்க பாக்யா பார்த்து எழில் என கூப்பிட சத்தம் போடாதீங்க கம்முனு இருங்க என்ற செயலை காட்டுகிறார் பிறகு ஈஸ்வரி சாமி கும்பிட்ட பிறகு என்ன எழில் எப்படி இருக்க எப்ப வந்த என்று ஈஸ்வரி கேட்கிறார் பிறகு எல்லோரையும் கூப்பிடுகிறேன் ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லி செழியன் ஜெனி மற்றும் இனி அவை கூப்பிட்டு உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ் என்று சொல்லி நான் பண்ண போற படத்துக்கு நாளைக்கு பூஜை 10:00 மணிக்கு என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் உடனே பாக்யா ரொம்ப சந்தோஷமா இருக்கு எள்ளு என்று சொல்ல எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்மா என்று சொல்லுகிறார். நாளைக்கு நீயும் பாட்டியும் வந்து தான் விளக்கேத்தி பூஜை ஆரம்பித்து வைக்கணும் என்று சொல்ல, ஈசு நீ தான் முதல்ல நிக்கணும் என்று சொல்ல ஈஸ்வரி நீ படம் பண்ணி பெரியாளாக போறது சந்தோஷம் தான் ஆனா நான் வந்து முதல்ல நிக்க மாட்டேன். நான் வரமாட்டேன் என்று சொல்ல எழில் முகம் மாறுகிறது.
ஈஸ்வரி உள்ளே சென்றுவிட செழியன் நான் வேலைக்கு போகும்போதே எதிரில் வர மாட்றாங்க இனியா காலேஜ் போகும்போது என்னை பார்க்க மாட்டாங்க என்றெல்லாம் சொல்ல இனி அவங்க அதிர்ஷ்டம் இல்லாதவங்கன்னு அவங்களே நெனச்சுக்கிட்டு இருக்காங்க எழில் என்று சொல்லுகிறார். சரி நீங்க போயிட்டு உட்காருங்கள் நான் உடனே ஸ்வீட் பண்ணி எடுத்துக்கிட்டு வரேன் என்று பாக்கியா கிச்சனுக்கு சென்று விடுகிறார்.
பிறகு ப்ரொடியூசர் பாக்க வந்த கோபி பூஜைக்கான வேலை தான் நடந்துக்கிட்டு இருக்கு என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் சார் என்று சொல்லுகிறார் பிறகு பூஜைக்கு இன்வைட் பண்ணக்கூடிய ஆள் பெயர் எல்லாம் இதில் இருக்கு யார்னா விட்டுட்டு இருந்தா சொல்லுங்க பண்ணிக்கலாம் என்று சொல்ல ஈஸ்வரியின் பேராளி திருப்பதி பார்த்து ஏன் எங்க அம்மாவோட பேரு அடிச்சிருக்கு என்று சொல்ல அவங்க வரப்போவதில்லை எழில் கிட்ட சொல்லி இருக்காங்க அதனால தான் என்று சொல்ல இல்ல எங்க அம்மாவை கூப்பிட சொல்லுங்க என்று கோபி சொல்லுகிறார் ஆனால் ஒரு ரெக்குவஸ்ட் இதுல எழில் ஓட அம்மா இந்த பங்க்ஷன்ல கலந்துக்க கூடாது என்று சொல்ல ப்ரொடியூசர் அது எப்படி நான் சொல்ல முடியும் உங்களுடைய அம்மா கலந்துக்கணும்னு நீங்க நினைக்கும் போது எழிலோட அம்மா கலந்துக்கணும்னு எழில் நினைக்க மாட்டானா நான் சொல்லிப் பார்க்கிறேன் என்று சொல்ல கண்டிப்பா நீங்க இதை சொல்லித்தான் ஆகணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். வெளியே வந்த கோபி ஏற்கனவே செழியனும் இனியாவும் என் பக்கம் வந்துட்டாங்க எழிலும் வந்துட்டானா அதுக்கப்புறம் நீ யாருமில்லாம நடுத்தெருவுல நின்னு கதறி அழும்போது ஆறுதலுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க என்று அவருக்கு அவரே பேசி சந்தோஷப்பட்டு சிரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு ரெஸ்டாரண்டில் பாக்கியா ஆயுத பூஜை ஆஃபரை போட்டு பூஜை செய்து பேனரை வெளியே வைக்கிறார். அங்கிருந்து ஒருவர் வந்து இவ்வளவு கம்மி விலையில் இவ்வளவு பொருள் எப்படி உங்களால கொடுக்க முடியும் என்று கேட்க கண்டிப்பா கொடுப்போம் ஆர்டர் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போட்டோ எடுத்து செல்கின்றனர். செல்வி அவர்களே சொல்றாங்க இது ரொம்ப கம்மின்னு எப்படி காணும் உங்களுக்கு லாபம் வரும் என்று சொல்ல நம்மளுக்கு இதனால ஒரு ஆர்டருக்கு 30 ரூபாய் நஷ்டம் தான் வரும் இருந்தாலும் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட்னாவே கெட்டுப்போன பிரியாணியை கொடுத்தவங்க அப்படிங்கற பேர்ல இருந்து நம்ம வெளிய வரணும் அதுக்கு நம்ம தரமான உணவுகள் கொடுக்கிறது மூலமாக அவங்ககிட்ட இருந்து நம்பிக்கையை நம்ப வாங்க முடியும் என்று சொல்லுகிறார் எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்ல செல்வியும் சரியான சொல்லுகிறார்.
பிறகு பாக்யாவிற்கு பணம் கொடுத்து உதவிய நபரை வந்து சந்தித்து இதுபோல் ஒரு ஆப்பர் போட்டிருப்பதாகவும் உங்க ஆபீஸ்ல வேலை செய்பவர்களுக்கு ஆயுத பூஜை கிப்ட்டா இதையே கொடுக்குறீங்களா என்று கேட்க என்ன சொல்லிட்டாங்களான்னு தெரியல நான் கேட்டுட்டு சொல்றேன் என்று கேட்க இன்னும் இல்லம்மா நீங்களே இந்த ஆர்டர் எடுத்துக்கோங்க என்று சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார். உடனே நீங்க போய் ஸ்வேதா என்கிற பொண்ண பாருங்க என்று சொல்ல பாக்யா அவரை சந்தித்து வெளியே வர 250 ஆர்டர் கிடைச்சிருக்கு செல்வி என்று சந்தோஷப்படுகிறார் உனக்கு ஆடர் எல்லாம் நல்லா தான் அக்கா கிடைக்குது ஆனால் அந்த செப்ப வச்சு பண்ணனுமா தான் தோணுது என்று சொல்லுகிறார்.
பழனிச்சாமி பாக்கியாவிற்கு ஃபோன் போட என்ன சொல்கிறார் அதற்கு பழனிசாமியின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.