சத்யாவை வெளுத்து வாங்கும் விஜயா, பாக்யாவை அசிங்கப்படுத்திய இனியா, பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து நடக்கப்போவது என்ன?

Web Ads

பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது.

baakiyalakshimi and siragadikka asai upcoming episode
baakiyalakshimi and siragadikka asai upcoming episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி முத்துவின் போனை எடுத்து அதில் இருக்கும் சத்யாவின் வீடியோவை விஜயாவிடம் காட்டுகிறார். இதனால் உச்சகட்ட கோவம் அடைந்த விஜயா மீனாவின் வீட்டுக்கு வந்து சத்யாவை வெளுத்து வாங்குகிறார். சத்யாவிற்கு சரியான அடி விழ குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மறுபக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா டான்ஸ் கிளாஸ்சில் சேர பாக்யா அனுமதிக்காததால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கோபி அவரை சேர்த்து விடுகிறார். இதனால் போட்டியில் இனியா ஜெயிக்க பாக்யா சந்தோஷப்பட்டு மேடைக்கு வர இருக்க நேராக கோபியிடம் சென்று இனியா வாங்க டாடி என்று அழைத்துச் சென்று என் டாடி ஆள் தான் இன்னைக்கு நான் ஜெயிச்சிருக்கேன் என்று சந்தோஷப்பட்டு கட்டிப்பிடிக்கிறார்.இதனால் பாக்யா அசிங்கப்பட்டு அங்கிருந்து வெளியே வருவதை பார்த்த கோபி சந்தோஷப்படுகிறார்.

வரும் வாரங்களில் இந்த இரண்டு சீரியல்களிலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

baakiyalakshimi and siragadikka asai upcoming episode
baakiyalakshimi and siragadikka asai upcoming episode