Ayalaan Movie Review
Ayalaan Movie Review

அயலான் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று பொங்க விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது அயலான் திரைப்படம்.

ரவிக்‌குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

வேற்று கிரகத்தில் இருந்து ஒரு கல் வந்து பூமியில் விழ அது வில்லன் கையில் கிடைக்கிறது. வில்லன் இதை வைத்து பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிசினஸை கையில் எடுக்கிறான்.

இதை அறிந்து வேற்று கிரகத்தில் இருந்து பூமியை காப்பாற்ற ஒரு ஏலியனை அனுப்பி வைக்க அது புழு, பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைகிறது.

இருவரும் சேர்ந்து சென்னையை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் படத்தின் கதைக்களம்.

YouTube video

படத்தை பற்றிய அலசல்:

சிவகார்த்திகேயன் சிறுவர்களுக்கான கதையை தேர்வு செய்து திறம்பட நடித்துள்ளார்.

யோகி ‌பாபு , கருணாகரன் காமெடி ரசிக்க வைக்கிறது. மற்ற அனைவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து பலம் சேர்த்துள்ளனர்.

புழு பூச்சி முதற்கொண்டு இந்த பூமி அனைவருக்கும் பொதுவானது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

படத்தின் இசையும் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

REVIEW OVERVIEW
அயலான் திரை விமர்சனம்
ayalaan-movie-reviewமொத்தத்தில் அயலான் அசத்தல்.