Atlee
பிகில் படத்தில் இரண்டு விஜயா? மூன்று விஜயா? என கேட்டதற்கு அட்லீ ட்விஸ்ட் கலந்த பதிலை கொடுத்துள்ளார்.

நாளை உலகம் முழுவதும் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ள அட்லீ தற்போது ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் பிகிலில் இரண்டு விஜயா? மூன்றா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எனக்கு கணக்கு வராது நண்பா.. நாளைக்கு நீங்களே படம் பார்த்து சொல்லுங்க என கூறியுள்ளார்.

மேலும் தளபதி 64 பத்தி என்ன நினைக்கறீங்க என இன்னொரு ரசிகர் கேட்டதற்கு ஐ லைக் லோகேஷ் கனகராஜ் என கூறி கைதி மற்றும் தளபதி 64 படத்திற்கு அவரது வாழ்த்துக்களை கூறி உள்ளார்.

அதே போல் பாடலாசிரியர் விவேக் உங்களோட அப்டேட்டிற்காக காத்துகிட்டு இருக்க நம்ம புள்ளைங்கோக்கு என்ன சொல்ல போறீங்க என கேட்டதற்கு நேரம் பார்த்து நீங்களே ஒரு அப்டேட் போட்டு விடுங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.