
ஜவான் படத்தை இயக்க அடி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சினிமாவிற்கு வந்த இவர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா தீபிகா படுகோன் பிரியாமணி உட்பட பலர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக இயக்குனர் ஆற்றிலே கிட்டத்தட்ட 35 கோடி முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பாலிவுட் படத்தை இயக்க அட்லீக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
