ரெட் கார்ப்பேட்டில் அசத்தும் அட்லீ-பிரியா தம்பதியினர் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். ‌‌‌‌ இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அட்லீ தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் நடைபெற்ற Cannes பிலிம் பெஸ்டிவல் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கும் அட்லீ தம்பதியினரின் ரெட் கார்ப்பரேட் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.