பீஸ்ட் படத்துக்கு மனைவியோடு சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Atlee Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து என்ற பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் அட்லி தன்னுடைய மனைவி ப்ரியாவுடன் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அட்லி ஆடிய டான்ஸை நீங்களே பாருங்க