Asaigal Thunbangal
Asaigal Thunbangal

Asaigal Thunbangal – # கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான்.

# திடீரென்று ஒரு நீர் சூழலில் மாட்டிக்கொண்டான். தப்பிக்க முயற்சி செய்து கரையை நெருங்கி விட்டான்.

ஆனால் அவன் இடையில் கொண்டு வந்த கைத்தடி நழுவி, தண்ணீரிலேயே விழுந்துவிட்டது. அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.

# அங்கு இருந்த ஒரு துறவி, ‘ஐயா’ நீங்கள் குளிக்க செல்லும் போது வெறும் கையுடன் தான் போனதைப் பார்த்தேன்.

ஆனால் இப்பொழுது கைத்தடி இல்லையே, நழுவி விட்டது என்று கவலை கொள்கிறீர்களே!. அது உங்களுடைய கைத்தடியா என்று கேட்டார்.

அடுத்தடுத்த அதிரடிக்கு தயாரான தளபதி? விஜய் 64,65,66 படங்களின் இயக்குனர்கள் இவர்கள் தானா?

# வியாபாரி நடந்தவற்றை கூறினான். துறவி சொன்னார், அய்யா உங்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.

கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது, இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது, அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

# அந்தக் கைத்தடியை நீங்கள் ஒரு இரண்டு நிமிடங்கள் உங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடைய கைத்தடி ஆனதா!, அது உங்களுடையது இல்லையே, பிறகு ஏன் வருத்தம்? என்று கேள்வி எழுப்பினார் அந்தத் துறவி.

பின்னர்தான் அந்த வியாபாரிக்கு புரிந்தது வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.

# பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை, இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை, ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.

அந்த உரிமை கொண்டாடும் ஆசை தான் நமது எல்லா துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆகவே நாம் நம்முடைய ஆசைகளைத் துறந்து இறைவனடி பக்தி வைத்தால் மட்டுமே மோட்ச பலனை அடைய முடியும். இடையில் வருவது எல்லாம் நமக்கு சொந்தமில்லை.