ஆர்யா-சந்தானம் கூட்டணியில் கலக்க வரும் காமெடி திரைப்படம்: பார்ட்2

இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்களின் வரிசையில் ராஜேஷும் வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்..
ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக சந்தானம்- ஆர்யா கூட்டணியின் நகைச்சுவை எனலாம்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜேஷ் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகத்துக்காக நல்ல கதையை எழுதியுள்ளோம். ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணி அமைந்தால் செம்மையாக வரும்’ என்றார்.
சந்தானம் தற்போது சிம்பு 49 மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன்-2 ஆகிய படங்களின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
சந்தானத்தின் இந்த ரீஎன்ரிக்கு வித்திட்டது சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘மத கஜ ராஜா’ படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.