இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மேலும் நித்யா மேனன், அருண் விஜய் ,ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகள் உள்ளதால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
தற்போது இந்த படத்தில் நடித்துள்ள அருண் விஜய் போஸ்டர் உடன் அப்டேட் ஒன்று சொல்லியுள்ளார் அதாவது “பெரிய படமாக இது இருக்கும்” என்று பதிவிட்டு உள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது.
View this post on Instagram