படப்பிடிப்பில் நடிகர் அருண்விஜய் படுகாயமடைந்துள்ளார். இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் அவர் தன்னுடைய ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.

Arun Vijay Injured in Shooting Spot : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். பக்கா கிராமத்து கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வேலையில் சண்டைக்காட்சி ஷூட்டிங்கின்போது அருண்விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை அடுத்த 5 நாட்களுக்கு வெயிட்டான பொருட்கள் எதையும் தூக்கக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது அருண் விஜய் தன்னுடைய சூட்டிங்கை காயத்துடன் முடித்துக் கொடுத்து விட்டு ஓய்வெடுக்க தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவ ரசிகர்கள் பலரும் அருண் விஜய்யின் ஆர்வத்தைப் பாராட்டி அவர் விரைவில் குணமடைந்து ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

வெற்றுடம்பில் Simbu வெளியிட்ட புகைப்படம் – மிரண்டுபோன பிரபலங்கள்! | Venthu Thaninthathu Kaadu