மகனுடன் மீன் மார்க்கெட்டில் அருண் விஜய் உலா வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய திறமை மற்றும் விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருடைய மகன் அர்ணவ் விஜய் ஓ மை டாக் என்ற படத்தில் மூலம் நடிக்க வந்தார்.
இந்த நிலையை தற்போது இவர்கள் இருவரும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மீன் மார்க்கெட்டில் உலா வந்து மீன் வாங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.
மக்கள் கொடுத்த அன்பு பற்றியும் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.