Aranthangi Nisha With Her Baby
Aranthangi Nisha With Her Baby

அறந்தாங்கி நிஷா அஜித் பாட்டை அழகாக பாட அதற்கு ஏற்றார் போல அவரது மகள் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

Aranthangi Nisha With Her Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

இதெல்லாம் நடக்கிற காரியமா? டாஸ்மாக்கை முழுசா மூட பெண்களுக்கு திரௌபதி பட இயக்குனர் கொடுத்த ஐடியா.!

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் அறந்தாங்கி நிஷா அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் கண்ணான கண்ணே பாடலை பாட அதற்கு அவரது மகள் கியூட்டான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகளுக்கு உங்களின் பிலஸ்ஸிங் கண்டிப்பாக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதேபோல் இன்னொரு பாடலைப் பாட அதற்கும் அவரது மகள் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

நாம் அனைவரும் தாலாட்டுப்பாட்டு கேட்டு தான் வளர்ந்தோம். நம்முடைய குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவோம் என தன்னுடைய குழந்தைக்கு தாலாட்டு பாடல் பாடும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.